தனுஷ், விஜய் சேதுபதி இவர்கள் எல்லாம் வெற்றிமாறனுக்கு செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள். சினிமாவில் இவர்கள் இருவரையும் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றவர் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளத்தில் ஆரம்பித்தது இவர்களது கூட்டணி. இன்று அசுரனாய் தனுஷ் வளர்ந்து நிற்பதற்கு முக்கியமான காரணம் வெற்றிமாறன் தான். அதை போல் விஜய் சேதுபதியும் விடுதலை, விடுதலை இரண்டாம் பாகம் என அவருடனே டிராவல் செய்து வருகிறார்.
இப்பொழுது இவர்கள் இரண்டு பேர் இடத்தையும் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் பிடித்து கொண்டார். வெற்றிமாறனின் குட் வெல் புத்தகத்தில் அந்த இளம் வாரிசுக்கு ஒரு பெரிய இடம் கொடுத்து வைத்திருக்கிறார். அவருக்காக ஒரு படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.
“ஆலப்புழா ஜூம்கானா” என்ற ஒரு மலையாள படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் வெற்றிமாறன். அவர் இயக்கப் போகும் இந்த படத்தில் அந்த வாரிசு நடிகர் தான் நடிக்க போகிறார். வெற்றி மாறனே இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார்.
விடுதலை இரண்டாம் பாகம் படத்தில் கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கென் கருணாஸ். இப்பொழுது இவர்தான் வெற்றிமாறன் நெஞ்சில் குடியிருக்கிறார். விடுதலை 2 படத்தில் கட்டுமஸ்தான உடம்புடன் தோன்றி அரை மணி நேரம் வந்தாலும் அனைவரையும் கவர்ந்திருந்தார் கென். இவரை வைத்து தான் ஆலப்புழா ஜிமிக்கானா படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றி.