அசுரன் படத்துக்குப் பிறகு தனுஷ் எவ்வளவோ அழைப்பு விடுத்தும் வெற்றிமாறன் செவி கொடுக்கவில்லை. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் படு பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் முழு திருப்தி இல்லாமல் ஒவ்வொரு நாளும் புது புது கதைகளை யோசித்து வருகிறார்.
ஜகமே தந்திரம், மாறன், பட்டாசு என அடுத்தடுத்து தனுஷ்தோல்வி படங்களை கொடுத்து வந்த நேரத்தில், வடசென்னை இரண்டாம் பாகம் பண்ணலாம் என வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இன்றுவரை அசுரன் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி இணையவில்லை.
இப்பொழுது விடுதலை 2 முடித்துவிட்டு, வெற்றிமாறன் வாடிவாசல் படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கையில் அதற்கும் டிமிக்கி கொடுத்துள்ளார். ஏற்கனவே அவர் வடசென்னை 2 படத்திற்கு பதிலாக “ராஜன் வகையறா” என்கிற வெப் தொடர் எடுப்பதாக இருந்தது.
வெற்றிமாறன் தனுசுக்கு போட்ட நாமம்
ராஜன் வகையறா என்பது இப்பொழுது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். அதாவது ராஜன் கதாபாத்திரத்தில் அந்த படத்தில் அமீர் நடித்திருப்பார். தனுஷ்சை விட அமீரின் அந்த ராஜன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்பொழுது அதை குறி வைக்கிறார் வெற்றிமாறன்
ராஜன் வகையறா என்று அவருடைய சங்கதியினரை இழுத்து வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்க போகிறாராம். இதில் அமீரும் இல்லை, தனுஷும் நடிக்கவில்லை மாறாக நடிகர் கருணாஸின் மகன் “கென் கருணாஸ்” இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். இதுதான் ராஜன் வகையறா என்று வடசென்னை இரண்டுக்கு பதிலாக படமாக போகிறது.
- வெற்றிமாறன் பஞ்சாயத்தை தீர்த்து வச்ச ஆண்ட்ரியா
- இறங்கி வந்த சூர்யாவுக்கு ட்விஸ்ட் வைத்த வெற்றி மாறன்
- வாடிவாசல் திறக்க புது சாவி ரெடி பண்ணிய வெற்றிமாறன்