திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லண்டனில் உருவாகும் காளை.. விடுதலை 2 முடித்த கையோடு படுஜோரான அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

Director Vettrimaran: வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் மாபெரும் வெற்றியால் விடுதலை இரண்டாம் பாகம் எடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சூரி கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முன்பே எடுக்கப்பட்டாலும் இப்போது மீண்டும் சில காட்சிகளை வெற்றிமாறன் எடுத்து வருகிறாராம்.

இந்நிலையில் வெற்றிமாறனின் மற்றொரு படமான வாடிவாசல் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தனர். இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று கூறியிருக்கிறார். அதாவது இவ்வளவு நாள் வாடிவாசல் கிடப்பில் கிடைக்கிறது என ரசிகர்கள் நினைத்தனர்.

Also read: விடுதலையால் இழுத்தடிக்கும் வெற்றிமாறன்.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு

ஆனால் வாடிவாசல் படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறதாம். அதுவும் இப்படத்தின் அனிமேஷன் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருவதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார். அதாவது வாடிவாசல் படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக சூர்யா நடிக்கிறார். இதனால் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளையை ஸ்கேன் செய்து அதேபோல் ரோபோவை உருவாக்கி வருகிறார்களாம். அந்தப் பணி முடிந்த பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Also read: கங்குவாவிற்கு விளக்கம் கொடுத்த சிறுத்தை சிவா.. நெஞ்சை பதற வைக்கும் கற்பனை கதை இதுதான்

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நியூ லுக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தை முடித்த கையுடன் சூரரை போற்று கூட்டணியுடன் மீண்டும் இணைவார் என்று தகவல் வெளியானது.

ஆனால் இப்போது வெற்றிமாறன் கொடுத்திருக்கும் அப்டேட்டினால் கங்குவா படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு தான் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து முக்கிய அப்டேட்டை படக்குழு விரைவில் வெளியிடும்.

Also read: விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

Trending News