ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வடசென்னை 2 வருமா? ஜாதி இயக்குனராக முத்திரை குத்தப்பட்ட வெற்றிமாறன்

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் காமெடியன் சூரியை ஹீரோ சூரியாக மாற்றி அழகு பார்த்தவர் வெற்றிமாறன். விடுதலை படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை எடுக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் யார் நடிப்பார் என்று பல குழப்பங்கள் இருந்த நிலையில், தற்போது அதில் நிச்சயம் சூர்யா தான் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க, ரசிகர்கள் ஒரு சிலர் இவரிடம் வடசென்னை 2 படம் வருமா என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த படம் வருமா வராத என்பதில் நீண்ட நாள் குழப்பங்கள் இருந்த நிலையில், “நிச்சயம் வராது..” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஜாதி இயக்குனராக முத்திரை குத்தப்பட்ட வெற்றிமாறன்

வடசென்னை படத்தை வெற்றிமாறன் பார்த்து பார்த்து செதுக்கினார். இருந்தபோதிலும், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட, அவருக்கு அந்த படம் ஜாதி இயக்குனர் என்ற முத்திரையை ஏற்படுத்திவிட்டது. மேலும் வடசென்னை மக்களே, இவரை எதிர்க்க ஆரம்பித்தனர். இந்த படத்தையும் புறக்கணித்தனர்

அதற்க்கு காரணம் வடசென்னை மக்களின் வாழ்க்கை முறையை வெற்றிமாறன் காட்டிய முறை தான். வெறும் ஆபாச வார்த்தைகள் பேசுபவர்களாகவும், ரௌடிசம் செய்பவர்களாகவும் காட்டியுள்ளீர்கள். ஏற்கனவே தமிழ் சினிமா எங்களை அப்படி தான் அடையாளப்படுத்தி உள்ளது.

உங்களை போன்ற பெரிய இயக்குனர்களும் அப்படியே காண்பித்தாள் அதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்வது.. என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் வெற்றிமாறன் கேரியரில், அவர் எடுத்த பெரும்பாலான படங்களில் ஜாதியின் குறியீடு இல்லாமல் இருந்தது இல்லை. அதனால் அவரை ஜாதி இயக்குனராகவும் ஒரு சிலர் பார்க்கின்றனர்.

Trending News