திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

Ameer – Vetrimaran : இப்போது எங்கு பார்த்தாலும் அமீர் பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. ஞானவேல் ராஜா ஒருபுறம் அமீரை பற்றி அடுக்கடுக்கான புகார்களை வைத்துக்கொண்டு போகிறார். அமீரும் தன் பக்கம் உள்ள நியாயத்தை யூடியூப் வாயிலாக கூறி வருகிறார். இந்த சூழலில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தலைக்கு மேல் வெள்ளமே போனாலும் அமீர் இல்லாமல் வாடிவாசல் இல்லை என்பதில் இயக்குனர் வெற்றிமாறன் உறுதியாக இருக்கிறார். அதாவது ஏற்கனவே வடசென்னை படத்தில் தனுஷை காட்டிலும் அமீரின் ராஜன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அதேபோல் தான் வாடிவாசல் படத்திலும் ராஜன் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு அமீருக்கு ஒரு ரோலை வெற்றிமாறன் வைத்திருக்கிறார். வாடிவாசல் படத்தில் அப்பா, மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் அம்புளி மற்றும் பிச்சி ஆகியவை ஆகும்.

Also Read : உண்மையான பச்சோந்தி யாரு தெரியுமா.? அமீர் செஞ்ச ஒரே தப்பை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர்

பிச்சியின் மைத்துனன் மருது என்ற கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இப்போது நடக்கும் பிரச்சனையினால் அமீர் இந்த படத்தில் இருந்து பின் வாங்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஞானவேல் ராஜா இப்போது இந்த பிரச்சனையை கிளப்புவதற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஏனென்றால் சூர்யா குடும்பத்தில் இருந்து அமீரை விலக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாடிவாசல் படத்தின் சூட்டிங் தொடங்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாடிவாசல் படத்தில் அமீரை நடிக்க வைப்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருக்கிறார்.

Also Read : அமீரை கொச்சைப்படுத்திய ஞானவேலுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திய பொன்வண்ணன்.. உச்சகட்ட அவமானம்

Trending News