வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெற்றிமாறன் இயக்க உள்ள பயோபிக் படம்.. சவுக்கு சங்கராக நடிக்கும் ஹீரோ

Director Vetrimaran: வெற்றிமாறனின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்தார்கள். இது ஒரு புறம் இருக்க இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக வாடிவாசல், விஜய்யின் படம் என வெற்றிமாறன் லயன் அப்பல் நிறைய படங்கள் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சவுக்கு சங்கர். அரசியலில் நடக்கும் விஷயங்களை எந்த பயமும் இன்றி வெட்ட வெளிச்சமாக தனது யூடியூப் வாயிலாக இவர் கூறி வருகிறார்.

Also Read : இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்.. பிரம்மிக்க செய்த விடுதலை வெற்றிமாறன்

இதனால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி வருகிறார் சவுக்கு சங்கர். இதை தொடர்ந்து ரெட் ஜெயண்ட் உதயநிதி மற்றும் திமுக கட்சியை இவர் வெளிப்படையாகவே சாடி வருகிறார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் நிஜ வாழ்க்கையை  வெற்றிமாறன் ஒரு படமாக எடுக்க இருக்கிறாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து சவுக்கு சங்கர் பேசியிருக்கிறார். வெற்றிமாறனும் தானும் ஒரு படம் எடுப்பதை பற்றி பேசி வருகிறோம் என்று கூறியிருக்கிறார். அப்படம் அவரின் பயோபிக் படமாக தான் உருவாக இருக்கிறது. அந்த படத்தில் சவுக்கு சங்கராக தனுஷ் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read : விடுதலை 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி.. ரவுண்டு கட்ட போகும் வெற்றிமாறன்

வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் என்றால் தனுஷ் தான். அவர்கள் அவரின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை வெற்றிமாறனுக்கு தொடர்ந்து தனுஷ் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்த நிலையில் அடுத்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

ஆகையால் வெற்றி மாறனும் தனது படங்களை முடித்த பிறகு, தனுஷ் தனது 50 ஆவது படத்தை முடித்த பிறகு தான் சவுக்கு சங்கர் படம் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. மேலும் கண்டிப்பாக வெற்றிமாறன், சவுக்கு சங்கர் இருவரும் ஒரு படம் குறித்து பேசி வருவதால் விரைவில் இதுக்கான அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

Also Read : அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

Trending News