வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

Soori, Vetrimaran: சூரி காமெடி நடிகராக இருந்ததை காட்டிலும் இப்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் சூரி பிஸியாக இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இப்போது சூரிக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தை தாண்டி கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புதான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிமாறன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுக்க திட்டம் போட்டு இருக்கிறார்.

Also Read : யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த 4 படங்கள்..சூரி சந்தானம் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்

அதாவது சூரியின் மார்க்கெட் இவ்வளவு உயர்வதற்கான காரணம் வெற்றிமாறன் தான். ஆகையால் அவர் கொடுக்கும் சம்பளத்தை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சூரி வாங்கிக் கொள்வார். இதனால் இப்போது சூரியின் படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார்.

சின்ன மீனை போட்டு பெரிய மீன் எடுப்பது போல சம்பளத்தை குறைவாக கொடுத்து பெத்த லாபத்தை எடுத்து விடலாம். மேலும் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்க இருக்கிறார். ஏற்கனவே லிங்குசாமியின் ஜி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.

Also Read : அடுத்த 7 வருஷத்துக்கு ரொம்ப பிஸி.. நிற்க நேரமில்லாமல் பறக்கும் வெற்றிமாறன், கைவசம் இருக்கும் 6 படங்கள்

சமீபகாலமாக லிங்குசாமி இயக்கி வரும் படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் சூரியை கதாநாயகனாக வைத்து கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறாராம். மேலும் இதற்கான கதையை இப்போது தயார் செய்து வருகிறார்.

ஆகையால் லிங்குசாமி, வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதால் சூரி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய இருக்கிறார்கள்.

Also Read : சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

Trending News