திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பல கோடிகள் கொடுத்தும் மசியாத வெற்றிமாறன்.. ராஜாமவுலி பட நடிகரை டீலில் விட்ட பரிதாபம்

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது பயங்கர பிசியாக இருக்கிறார். சூரி ஹீரோவாக நடித்து வரும் விடுதலை திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அதை அடுத்து வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ஆனால் சூர்யா, பாலாவின் திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த திரைப்படம் சிறிது தாமதமாகி வருகிறது. அதனால் வெற்றிமாறனுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதில் நடிகர் தனுஷ், வெற்றிமாறனுடன் இணைந்து நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.

ஏனென்றால் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை. அதனால் தனுஷ் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்தால் படம் வெற்றி பெறும் என்று நினைத்துள்ளார். ஆனால் வெற்றிமாறன் தற்போது பிசியாக இருந்த காரணத்தால் தனுஷின் அழைப்பை நிராகரித்து விட்டார்.

அதேபோன்று தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறனுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் வெற்றிமாறன் அவரிடமும் நான் ரொம்பவும் பிசியாக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் பலரையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் காரணமாகத்தான் அவர் வெற்றிமாறனுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரின் அழைப்பை வெற்றிமாறன் நிராகரித்த போதிலும் ஜூனியர் என்டிஆர் அவருக்கு 30 கோடி வரை சம்பளம் கொடுப்பதற்கு தயாராக இருந்திருக்கிறார். ஆனாலும் வெற்றிமாறன் தன் முடிவில் இருந்து மாறாமல் கடைசி வரை உறுதியாக இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Trending News