வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிப்படத்தை வெப் சீரிஸாக எடுக்கும் வெற்றிமாறன்.. முக்கியமான கதாபாத்திரத்தில் கருணாஸின் மகன்

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். ஆடுகளம் தொடங்கி அசுரன் வரை இவர் எடுத்த அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதுதவிர இவரது படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்துள்ளது. எனவே வெற்றிமாறன் படங்களில் நடிக்க அனைத்து நடிகர்களுக்கும் போட்டி போட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகின்றன.

தற்போது காமெடி நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதனை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படத்தை வெப் சீரிஸாக இயக்க முடிவு செய்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வடசென்னை படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. முன்னதாக இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தை வெப் சீரிஸாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் இந்த வெப் சீரிஸை முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதில் அமீரின் சிறுவயது கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

dhanush
dhanush

இதில் 18 வயது முதல் 24 வயது வரைக்குட்பட்ட கதை என்பதால் இதற்கான கதையை தற்போது வெற்றிமாறன் எழுதி வருகிறார். ராஜன் வகையறா என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸின் பணிகளை விடுதலை, வாடிவாசல் ஆகிய படத்தின் பணிகளை முடித்த பின்னர் வெற்றிமாறன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News