ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வந்து விட்டாலே புயல் மழை என பல கண்டங்களை கடந்து தான் சென்னை மாநகரம் வெளியில் வரும். அதுவும் நவம்பர் மாதம் முடிந்து விட்டால் கிறிஸ்மஸ், நியூ இயர் என மக்கள் பண்டிகைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த வருடம் பொங்கலுக்கு இப்பொழுது வரை விடா முயற்சி படம் மட்டுமே லிஸ்டில் இருந்து வருகிறது. ஆனால் எங்களுக்கு பொங்கல் போட்டியே வேண்டாம் என டிசம்பர் மாத இறுதியில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. நான்குமே பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் படங்கள்.
டிசம்பர் 20 கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்து 4 படங்கள் ரிலீஸ் ஆகிறது. எப்படியும் பொங்கலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கிறது அதனால் இந்த நான்கு படங்களையும் குறைந்தது 10 நாட்களுக்கு மேல் ஒட்டி விடலாம் என திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
படங்களே ஓடாத ஜெயம் ரவியும் டிசம்பர் 20ஆம் தேதி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள “காதலிக்க நேரமில்லை” படத்தின் மூலம் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளார். இதுபோக வெற்றிமாறனின் வளர்ப்பு பிள்ளைகளாகிய தனுஷும் விஜய் சேதுபதியும் மோத உள்ளனர்.
வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் அதே நாளில் தான் வெளி வருகிறது. இதுபோக தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படமும் ரிலீஸ்க்கும் டிசம்பர் 20ஆம் தேதி தான் நாள் குறித்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சமுத்திரகணியும் தன் பங்கிற்கு திரு மாணிக்கம் என்ற படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.