புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தரமான படங்களைக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்.. பாக்ஸ் ஆபீஸ் ஹீரோக்களுக்காக காத்திருக்கும் வெற்றிமாறன்

தன் பெயரிலேயே வெற்றியை வைத்துக்கொண்டு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் சூர்யா தற்போது பாலா படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் வாடி வாசல் திரைப்படம் எப்போது வரும் என்றே தெரியாத ஒரு நிலை இருக்கிறது.

இதனால் வெற்றிமாறன் தற்போது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். மேலும் அவர் இதுவரை தனுஷை மட்டுமே வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த படங்கள் அனைத்தும் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது.

இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிக் கொண்டிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க முடியவில்லை என்ற ஒரு ஆதங்கம் அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் பெரிய அளவில் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கே ரஜினி, விஜய் போன்றவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் தரமான படங்களை கொடுத்தும் முன்னணி நடிகர்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற ஒரு விரக்தியில் தற்போது வெற்றிமாறன் இருக்கிறார். இதற்கு பின்னணியில் மற்றொரு பெரிய காரணமும் இருக்கிறது. அதாவது வெற்றிமாறன் சூப்பர் ஸ்டாருக்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்து அவரிடம் கூறி இருக்கிறார்.

அதற்கு ரஜினியும் நிச்சயம் பண்ணலாம் என்று சம்மதித்திருக்கிறார். ஆனால் இடையில் தனுஷின் விவாகரத்து செய்தி நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. எப்படி என்றால் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அந்த திரைப்படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம்.

இந்நிலையில் ரஜினி, வெற்றி மாறனிடம் இனி சேர்ந்து படம் செய்ய முடியாது என்று கறாராக கூறி விட்டதாக தெரிகிறது. மேலும் சூர்யாவும் வாடிவாசல் திரைப்படத்தில் எப்போது கலந்து கொள்வார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனால் வெறுத்துப்போன வெற்றிமாறன் தற்போது விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சம்மதம் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். கூடிய விரைவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி விட வேண்டும் என்ற ஒரு முடிவோடு அவர் தற்போது இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Trending News