வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

Actor Vijay Sethupathy: பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கினால் அதற்கு பல விருதுகள் வந்து குவியும். அதனாலேயே இவருடன் கூட்டணி போடுவதற்கு பல ஹீரோக்களும் விரும்புகின்றனர். அதில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை மிகப்பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிமாறன் முடித்துவிட்டாராம். ஏற்கனவே இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து தான் இவர் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் சில காட்சிகள் தேவை என்பதால் அதற்கான வேலையில் வெற்றிமாறன் பிஸியாக இருக்கிறார்.

Also read: இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்.. பிரம்மிக்க செய்த விடுதலை வெற்றிமாறன்

அதன்படி சூரி படத்திற்கு தேவையான தேதிகளை கொடுத்து விட்டாலும் விஜய் சேதுபதியின் தேதியை வாங்குவது தான் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் அவர் தமிழ், ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார். அதனாலேயே அவரிடம் மீண்டும் எப்படி இதை கூறுவது என தயாரிப்பு தரப்பு ஒரு தயக்கத்திலேயே இருந்திருக்கிறது.

ஏனென்றால் விஜய் சேதுபதி ஒப்பந்தம் போட்டதற்கு மேலாக தேதிகளை கேட்டால் கொந்தளித்து விடுவாராம். ஆனாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் விஜய் சேதுபதியை வெற்றிமாறன் தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாராம். அதாவது இரண்டாம் பாகத்திற்கு தேவையான தேதிகளை விஜய் சேதுபதி தருவதாக கூறிவிட்டாராம்.

Also read: விடுதலை 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி.. ரவுண்டு கட்ட போகும் வெற்றிமாறன்

இத்தனைக்கும் அவர் இதற்காக கொஞ்சம் கூட கோபப்படவில்லையாம். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. தன்னுடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து தான் அவர் உடனே கேட்ட தேதிகளை கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் அடுத்த வருட தொடக்கத்தில் படம் தயாராகிவிடும் என்கிறது திரையுலக வட்டாரம். அது மட்டும் இன்றி இந்த இரண்டாம் பாகம் மூன்றாம் பாகத்திற்கான ஒரு லீடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும் வாடிவாசல் எப்போது தொடங்கும் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

Also read: லண்டனில் உருவாகும் காளை.. விடுதலை 2 முடித்த கையோடு படுஜோரான அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

Trending News