வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்

Lokesh kanagaraj: வெற்றிமாறன் பொல்லாதவன் படம் எடுத்த சமயத்தில் ஒரு நாளைக்கு 170 க்கும் மேற்பட்ட சிகரெட் பிடிப்பாராம். ஏற்கனவே ஐந்து பாக்கெட் முடிந்து விட்டது என்று சொன்னால் இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கிட்டு வா என்று சொல்லக்கூடியவராக இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

இதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் கௌதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தைப் பார்த்துள்ளார். அதில் புகை பிடிப்பதால் வரும் பிரச்சனை பேசப்பட்டிருக்கும். அதன் பிறகு தான் கண்டிப்பாக இதை விட வேண்டும் என்ற எண்ணம் வெற்றிமாறனுக்கு வந்ததாம்.

Also Read : விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

அந்த படத்தைப் பார்த்து முடித்த பிறகு இதுதான் தன்னுடைய கடைசி சிகரெட் என்று ஒருமுறை தம் அடித்தாராம். பிறகு தற்போது வரை சிகரெட் பிடிக்கவில்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு வெற்றிமாறன் கௌதம் மேனனின் படத்தைப் பார்த்து சிகரெட்டை விட்ட நிலையில் அவருக்கே திரும்ப சொல்லிக் கொடுத்துள்ளார் லோகேஷ்.

அதாவது லியோவின் விஜய் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விஜய் சிகரெட் பிடிப்பது போல போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது கௌதம் மேனனுக்கு சிகரெட் எப்படி பிடிக்க வேண்டும் என்ற காட்சியை லோகேஷ் கற்றுத் தந்ததாக கூறியிருக்கிறார்.

Also Read : நிஜ மனைவியுடன் நடித்துள்ள மாதவன்.. எல்லாம் கௌதம் மேனன் பார்த்த வேலை தான்

மேலும் இவ்வளவு தத்ரூபமாக எப்படி சிகரெட் கையில் பிடிக்க வேண்டும் என்பதை எப்படி கற்றுக் கொண்டாய் என கௌதம் மேனன் லோகேஷிடம் கேட்டிருக்கிறார். அதற்கு காக்க காக்க படத்தை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளை தங்களது படத்தில் வைக்க விரும்புவதில்லை.

ஆனால் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கும் விஜய் படத்தில் இவ்வாறு எக்கச்சக்க சிகரெட் காட்சிகளை லோகேஷ் வைத்திருக்கிறார். அதுவும் கௌதம் மேனனால் சிகரெட்டையே வெறுத்த வெற்றிமாறன் இருக்கையில், லியோ படத்தில் கௌதம் மேனனுக்கு சிகரெட் பிடிக்க சொல்லி கொடுத்திருக்கிறார் லோகேஷ் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

Also Read : 5 ஜாம்பவான்களை அடுத்தடுத்து இயக்கத் தயாராகும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம்

Trending News