திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. டபுள் லாபத்தை அள்ள நினைக்கும் வெற்றிமாறன்

வெற்றி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் பல வருடங்களாக விடுதலை படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஆர் எஸ் இன்ஃபார்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விடுதலை படத்தில் உள்ள கெட்டபின் காரணமாக சூரி இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

Also Read : 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா

ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காமல் பிரச்சனை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பிரச்சனையானது. இப்போது ஒரு வழியாக விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டு பாகங்களையும் வெற்றிமாறன் எடுத்து முடித்துள்ளார்.

ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கலாம் என்ற திட்டத்தில் வெற்றிமாறன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு டபுள் லாபம் பார்க்க உள்ளார். இந்த படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது. இதில் படப்பிடிப்பு முடிந்ததற்கான புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Also Read : ஐபோனில் படமாக்கப்பட்ட 5 தமிழ் படங்கள்.. 80% காட்டிலே படமாக்கிய வெற்றிமாறன்

மேலும் இப்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. விடுதலை படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருவதால் அந்த படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளார்

Also Read : கேவலமான செயலுக்கு உடந்தையாக இருக்கும் வெற்றிமாறன்.. போன உயிர் போயிடுச்சு, துரதிஷ்டமானா இரங்கல் அறிக்கை

Trending News