தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன்னுடைய வாழ்க்கையில் தன்னை மிகவும் பாதித்த படம் என்ன என்பதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதுவும் பிரபல நடிகர் சூப்பர் ஹிட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் படித்து அதிலிருந்து கதையை தேர்வு செய்து அதற்கான திரைக்கதையை அமைத்து படம் இயக்கி பெரிய பெயரைப் பெற்றவர் வெற்றிமாறன்.
கதைக் கருவை வைத்துக் கொண்டு அதற்கான திரைக்கதை அமைத்து தன்னுடைய பாதையில் தனித்துவமாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னை மிகவும் பாதித்த படம் என ஒரு படத்தை குறிப்பிட்டுள்ளார்.
சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். சசிகுமார் மற்றும் ஜெய் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் நாயகியாக சுவாதி, முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி மற்றும் கஞ்சா கருப்பு போன்றோர் நடித்திருந்தனர்.
சுப்ரமணியபுரம் படத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அதிலிருந்து தற்போது வரை தன்னால் மீண்டு வர முடியவில்லை எனவும் வெற்றிமாறன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். சசிகுமார் இயக்கத்தில் சிறந்த படமாக சுப்பிரமணியபுரம் உருவானது. இனி அவரே நினைத்தாலும் இப்படி ஒரு படம் எடுப்பாரா என்பது சந்தேகம்தான்.