2006 ஆம் ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த மிக பிரமாண்ட வெற்றி பெற்ற படம் வேட்டையாடு விளையாடு. கமலஹாசனுக்கு என்றே இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை செதுக்கி இருப்பர் கௌதம் மேனன் என்று தான் கூறலாம்.
இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இவரது மகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுவார் என்பது தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும்.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் முதலில் சத்யராஜ் மற்றும் அருண்பாண்டியனை கௌதம் மேனன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.
அப்போது மார்க்கெட் இல்லாத சத்யராஜுக்கு கூட இந்த ரோலில் நடிக்க மறுத்து விட்டாராம். சத்யராஜ் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம்.
இதனால் பிரகாஷ்ராஜ் இந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டு மிக அற்புதமாக நடித்திருப்பார். கமலஹாசன் சினிமா வாழ்க்கையில் வேட்டையாடு விளையாடு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. கமலஹாசன் மற்றும் பிரகாஷ்ராஜுக்கு இந்த படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர். ஹீரோவாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர நடிகராக தற்போது வெற்றி நடை போட்டு வரும் சத்யராஜ் இது போன்ற சூப்பர் ஹிட்டான படங்களின் வாய்ப்புகளை இழந்ததற்கு வருத்தப்படடு புலம்பியது உண்டாம்.