சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மக்கள் கொண்டாடும் இந்த படங்கள் OTT-யில் ஆரம்பிக்கும் வேட்டை.. தேதி குறித்த படக்குழு! ஆரவாரத்தில் ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல திரையில் இன்றளவும் இருக்கும் லப்பர் பந்து, அடுத்ததாக OTT வேட்டைக்கு தயாராகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியானது.

அதே போல, ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமணன் குமார் தயாரிப்பில் ‘லப்பர் பந்து’ திரைப்படமும் வெளியாகி சக்கை போடு போடுகிறது. போற போக்கை பார்த்தால் இந்த இரண்டு படத்திற்கும் தான் போட்டி நடக்கும் போல..

குறிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டையனும், குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லப்பர் பந்து படமும் மோதுவதை பார்க்கும்போது, தமிழ் சினிமா அடுத்த கட்டம் செல்வதை கணிக்க முடிகிறது. லப்பர் பந்து படம், வெளியான நாள் முதல் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

OTT-யில் எது வேட்டை நடத்தும்

லப்பர் பந்து படத்தை பார்த்த அனைவருமே பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம், படத்தைப் பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி போன்றோர் மனதார படத்தைப் பாராட்டியிருந்தனர்.

அதே போல நேற்று வெளியான வேட்டையன் படத்திற்கும், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது முந்தைய படங்களை போல் இல்லாமல் ஆழமான கதையம்சம் கொண்ட படமாக வேட்டையன் உள்ளதென ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், லப்பர் பந்து வரும் 18ஆம் தேதி, டிசனி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், வேட்டையன் படம், இன்னும் 4 வாரங்களில், அமேசான் பிரைமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending News