மொத்தமாய் குளறுபடியான வேட்டையன் ஆடியோ லான்ச்.. லைக்காவும், ரஜினியும் கண்டு கொள்ளாத பரிதாபம்

வேட்டையன் ஆடியோ லான்ச் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. சமீபகாலமாக அங்கே நடக்கும் விழா எல்லாமும் பிரச்சனையில் தான் முடிகிறது. ஏற்கனவே அங்கே ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றது. அதில் மிகவும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதை காண வந்தவர்கள் அவதியில் சிக்கினார்கள்.

இப்பொழுது ரஜினியின் வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் அப்படித்தான். இந்த நேரு ஸ்டேடியத்தில் , உள்விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டு அரங்கம் என எல்லா போட்டிகளும் விளையாடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அவுட்டோர் மைதானத்தில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. அதேபோல் உள்விளையாட்டு அரங்கத்தில் 5000 பேர் மட்டுமே பார்க்கும் வசதியோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. ரஜினி வேட்டையன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இங்கதான் நடைபெற்றது.

5000 பேர் அமரக்கூடிய அரங்கத்திற்கு கிட்டத்தட்ட 7000 டிக்கெட்டுக்கு மேல் விற்று இருக்கின்றனர். இதுதான் மொத்த குளறுபடிக்கும் காரணமாக அமைந்தது. எல்லார் கையிலும் டிக்கெட் இருந்தது ஆனால் அது போலி டிக்கெட் என தடுத்து வெளியில் நிறுத்தப்பட்டனர்.

லைக்காவும், ரஜினியும் கண்டு கொள்ளாத பரிதாபம்

பெங்களூர், மும்பை, ஹைதராபாத் என வெளிமாநிலங்களில் இருந்து பல பேர் விமானம் மூலம் வந்திருந்தனர். அவர்கள் கையில் டிக்கெட் இருந்தும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. போலீ டிக்கெட் என எதுவும் தனியாக அச்சடிக்கவில்லை, எல்லாமே ஒரிஜினல் டிக்கெட் தான்.

கொள்ளளவுக்கு மாறாக அதிகமாய் ஆசைப்பட்டு டிக்கெட் விற்றது தான் இதற்கு காரணம். முக்கியமான விஐபிகள் கேட்பதால், பிரஷர் தாங்க முடியாமல் அதிக அளவு டிக்கெட்டை அச்சடித்து விற்றுள்ளனர். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்கள் தான் இதற்கு பொறுப்பு. ரஜினி மற்றும் தயாரிப்பாளர் லைக்கா இருவரும் எதையும் கண்டுகொள்ளவில்லை.

Trending News

- Advertisement -spot_img