ரஜினி படம் நேற்று ரிலீஸ் ஆகி இதுவரை இல்லாத அளவிற்கு டல் கலெக்சனை சந்தித்துள்ளது. எப்பொழுதுமே ரஜினிக்கு மாஸ் ஓபனிங் இருக்கும் ஆனால் இந்த முறை அது கொஞ்சம் டல் அடித்துவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை
ஜெயிலர் படத்திற்கு இருந்த அளவிற்கு கூட இந்த படத்திற்கு பிரமோஷன் இல்லை. ஜெயிலர் படம் ரிலீசாகும் கடைசி இரண்டு நாட்கள் வரை நெல்சன் மற்றும் படக்குழுவினர் படத்திற்கு வளைத்து வளைத்து பிரமோஷன் பண்ணினார்கள். ஆனால் இந்த படத்தில் அதை கோட்டை விட்டுவிட்டார் டிஜே ஞானவேல்.
எந்த ஒரு சேனலுக்கும் வேட்டையன் படத்தை ப்ரோமோஷன் செய்யும் வீடியோ கிளிப்பிங்சை கொடுக்கவே இல்லையாம். ஹைதராபாத்தில் ஞானவேல் இந்த படத்திற்கான பைனல் மிக்சிங் வேலையில் ஈடுபட்டதால் அவரால் சரியாக இதற்கு ப்ரோமோஷன் கொடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் வேட்டையன் படம் முதல் நாளில் 17 கோடிகள் வசூலித்துள்ளது. உலக அளவில் 60 கோடிகள் கலெக்சன் வந்துள்ளது. எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தான் என்கிறார்கள். இந்த படத்தை அவர் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்தாக வேண்டும் என விடாப்பிடியாய் இருந்துள்ளார். படத்தை டைரக்டர் தீபாவளி மற்றும் அதன் பின்வரும் நாட்களில் வெளியிட திட்டம் போட்டிருந்தார்.
இதுபோக மொத்தமாய் தமிழ்நாட்டில் 600 ஸ்கிரீன்களில் தான் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. மீதமுள்ள 300 தியேட்டரில் 150 இல் லப்பர் பந்தும், அதுபோக 100 தியேட்டரில் கார்த்தியின் மெய்யழகன் படமும் ஓடியதால் எதிர்பார்த்த அளவு கலெக்ஷன் கிடைக்கவில்லை.