வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பெண் ஆசையால் அழிந்த தொழிலதிபர்.. உண்மையை உடைக்க வரும் வேட்டையன் இயக்குனர், அடுத்த படம் இதுவா.?

TJ Gnanavel: ஜெய்பீம் மூலம் பாராட்டுகளை பெற்ற ஞானவேல் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய வேட்டையன் கடந்த பத்தாம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால் முன்னதாகவே இவர் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக்க போகிறார் என்ற தகவல்கள் கசிந்தது. அதன்படி தமிழகத்தையே புரட்டி போட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதி சம்பந்தப்பட்ட வழக்கை தான் அவர் கையில் எடுத்துள்ளார்.

சாதாரண மளிகை கடையாக ஆரம்பித்து பிறகு தமிழகம் முழுவதும் கிளை பரப்பி உள்ள சரவணபவன் என்ற சாம்ராஜியத்தை உருவாக்கியவர்தான் ராஜகோபால். ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஜீவஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்ய இவர் ஆசைப்பட்டார்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் ஜீவஜோதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்த நிலையில் கூட அவருடைய ஆசை அடங்கவில்லை. அதை அடுத்து ஜீவஜோதிக்கு ராஜகோபால் பல தொல்லைகளை கொடுத்திருக்கிறார்.

அடுத்த உண்மை சம்பவத்திற்கு தயாரான ஞானவேல்

இதில் ஜீவஜோதியின் கணவர் மர்மமான முறையில் இறந்து போனார். அதற்கு ராஜகோபால் தான் காரணம் என வழக்கு தொடர்ந்த ஜீவஜோதி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் போராடி தண்டனை பெற்றுக் கொடுத்தார். முதலில் பத்து ஆண்டுகள் ராஜகோபாலுக்கு தண்டனை கிடைத்தது.

ஆனால் அதன் பிறகு நடந்த மேல்முறையீட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சிறை செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர் உயிரிழந்து விட்டார். இப்படியாக ஒரு பெண்ணின் போராட்டத்தை தான் ஞானவேல் படமாக இருக்கிறார்.

இதற்கு ஜீவஜோதி சம்மதம் சொல்லி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புதல் அளித்து விட்டாராம். அதன்படி மும்பையின் மிகப்பெரிய நிறுவனமான ஜங்லி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. விரைவில் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளிவர இருக்கிறது.

ஜீவஜோதிக்கு நடந்தது குறித்து ஏகப்பட்ட செய்திகள் மீடியாவில் வந்திருக்கிறது. ஆனால் இதில் உண்மை நிலை என்ன என்பது உறுதிப்பட யாருக்கும் தெரியவில்லை. இப்படம் இந்த வழக்கின் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News