Rajini : பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே பல கோடிக்கு ஓடிடியில் விலை போகும். அதுவும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்க முன் வருவார்கள்.
அதேபோல் தான் வேட்டையன் படம் ரிலீசுக்கு முன்பே அமேசான் பிரைம் நிறுவனம் கிட்டத்தட்ட 62 கோடிக்கு படத்தை வாங்கியது. எப்போதுமே படங்கள் தியேட்டர் ரிலீஸ் ஆன பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாவது வழக்கம். அதிலும் குறிப்பாக ரஜினியின் லால் சலாம் படம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியானது.
மேலும் கடந்த மாதம் வெளியான கோட் படம் ஒரு மாதம் நிறைவு பெறுவதற்குள் நெட்ஃபிளிசில் வெளியாகிவிட்டது. அதேபோல் தான் இப்போது வேட்டையன் படத்தை இந்த மாதம் இறுதிக்குள் அமேசான் பிரைம் ஸ்டீம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓடிடியில் வெளியாக உள்ள வேட்டையன்
200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இப்போது இந்தியாவில் 55 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இந்த மாதத்திற்குள் எப்படியும் போட்ட பட்ஜெட்டை படம் எடுத்து விடும் என்று லைக்கா நிறுவனம் நம்பிக்கையில் இருக்கிறது. இப்போது அதற்கு பாதகம் விளைவிக்கும் விதமாக ஓடிடி ரிலீஸ் சீக்கிரம் வருகிறது.
ஏற்கனவே லைக்கா தயாரிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் போகாததால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த படங்கள் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படம் தான். வேட்டையன் ஓரளவு நடுநிலையான கலெக்ஷனை பெற்று வருகிறது.
இதைப் பொறுத்துதான் அடுத்ததாக விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய லைக்கா முன் வர உள்ளது. இந்த சமயத்தில் இவ்வளவு சீக்கிரம் ஓடிடியில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனால் தலை தப்புமா என்ற நிலையில் லைக்கா இருக்கிறது. மேலும் பிளாக் படத்தாலும் வேட்டையன் வசூல் இப்போது குறைய தொடங்கி இருக்கிறது.