ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ரிலீஸுக்கு முட்டுக்கட்டையா நின்ன வேட்டையன்.. கங்குவாவை விடாமல் சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்

கங்குவா பட ரிலீஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தினால் தள்ளிப் போயுள்ளது. இந்த நிலையில், கங்குவா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கேட்ட இடமும் கிடைக்காததால் கங்குவா படக்குழு ஏமாற்றமடைந்துள்ளது.

சிறுத்தை, விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் சூர்யா கங்குவா படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா, சூர்யா இருவரும் முந்தைய படங்களின் தோல்வியால் இழந்த மார்க்கெட்டை கங்குவா படம் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதையடுத்து, கங்குவா படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினி- த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் படமும் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், கங்குவாவுடன் வேட்டையன் மோதவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் படம் அதே தேதியில் ரிலீஸாவதால், கங்குவா படம் தள்ளிப் போகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரஜினிக்கு வழிவிட்ட சூர்யா

இதுகுறித்து நடிகர் சூர்யா, சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அவர் படத்திற்கு வழிவிடுவோம். கங்குவா படம் ஒரு குழந்தை புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என்று கூறினார். அதன்படி, கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர்.

இந்த நிலையில், சினிமாவில் மூத்த நடிகராக இருந்தாலும் ரஜினியின் வேட்டையன் பட அறிவிப்பு மாதிரிதான் சூர்யாவின் கங்குவா பட அறிவிப்பும் வெளியானது. அப்படியிருக்க முட்டுக்கட்டை போடும் வகையில் ஏன் கங்குவாவின் ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இன்னொரு தரப்பினும் சூர்யாவின் பெருந்தன்மையைப் பாராட்டினர். ஆனால் இரு நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸானால் வசூல் பாதிக்கப்படும் என்பதால்தான் சூர்யா இம்முடிவை எடுத்ததாக சினிமா விமர்சகர்கள் கூறினர்.

ஆடியோ லான்ச்சுக்கு கேட்ட இடம் கிடைக்கவில்லை

இந்த நிலையில் பல கோடி பட்ஜெட்டில் பேண்டஸி பீரியட் ஆக்சன் படமாக கங்குவா உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவெத்து நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டது. ஆனால் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதால் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே அதே தேதியில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவை படக்குழு நடத்தவுள்ளது. ஏற்கனவே பட ரிலீஸுக்கு ரஜினி முட்டுக் கட்டிய போட்டதாக தகவல் வெளியாகும் நிலையில், சூர்யாவின் கங்குவா பட ஆடியோ லான்ச்சிற்கு நேரு ஸ்டேடியம் கிடைக்காததற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News