வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த் குடும்பத்திற்கு விஜய் காட்டும் நன்றி கடன்.. லாரன்ஸை விட ஒரு படி மேலே போன தளபதி

Vijayakanth : விஜய் இப்பொழுது விஜயகாந்த் குடும்பத்துடன் மிகவும் நெருங்கி பழகி வருகிறார். எல்லாவற்றிற்கும் காரணம் கோட் படத்தில் விஜயகாந்தை ஏ ஐ டெக்னாலஜி மூலம் பத்து நிமிடங்கள் திரையில் வர செய்கிறார் வெங்கட் பிரபு. அதற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டது.

விஜயகாந்தை வைத்து பல படங்களை தயாரித்தவர் அவரது மனைவி பிரேமலதா, அவரிடம் கேப்டன் நடித்த படங்களின் ஒரிஜினல் ஃபுட்டேஜ்களை வாங்கியுள்ளது கோட் படக்குழு. இந்த பழக்கவழக்கத்தின் மூலம் விஜய் மற்றும் விஜயகாந்த் குடும்பத்திற்கு நல்ல ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.

Vijay – Vijayakanth Combo Movie List

Senthoorapandi
Vasantha Raagam (Child artist)
G.O.A.T (AI Technology)

லாரன்ஸை விட ஒரு படி மேலே போன தளபதி

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படம் படைத்தலைவன். இந்த படத்தின் டீசர் வெளியீட்டை, விஜய்யின் ட்விட்டர் அக்கவுண்டில் ரிலீஸ் செய்யும்படி சண்முக பாண்டியன் மற்றும் பிரேமலதா விஜய்யிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு விஜய், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்படி ஒரு பதிலை சொல்லி அசத்தியுள்ளார்.

சண்முக பாண்டியன் நடித்த படங்கள்

Sagaptham (2015)
Madura Veeran (2018)
Ghajinikanth (2018) (Cameo appearance)
Kavalthurai Ungal Nanban (2020) (Guest appearance)
Server Sundaram (Upcoming)

படைத்தலைவன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவிற்கு நான் வருகிறேன் என்று விஜய், சண்முக பாண்டியனிடம் உறுதி கொடுத்து இருக்கிறார். ஜூன் மாத கடைசியில் படைத்தலைவன் படம் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இதற்கு வரும் முக்கியமான விருந்தாளி விஜய் தான்.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் படைத்தவன் படத்தில் கெஸ்ட் ரோல் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றியுள்ளார். இப்பொழுது லாரன்ஸ்சை விட ஒரு படி மேலே சென்று விட்டார் தளபதி. ஒரு காலகட்டத்தில் விஜய்க்கு சினிமாவில் திருப்புமுனை கொடுத்தவர் கேப்டன். அந்த நன்றி கடனுக்காக தளபதி எவ்வளவு செய்தாலும் தகும்.

விஜயகாந்த் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் லாரன்ஸ்

Trending News