BB7 Vichithra: நடிகை விசித்ரா 80 மற்றும் 90களின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்துவிட்டு இருக்கும் இடம் காணாமல் போன நடிகைகளின் லிஸ்டில் சில வருடங்கள் முன்பு வரை இருந்தார். திடீரென சின்னத்திரையில் அவரை பார்த்த பொழுது ஓ! இந்த நடிகை தானா என்று சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த பிறகு தான் இவர் எப்படிப்பட்டவர் என்பது ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
சில்க் சுமிதாவிற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் மற்ற கவர்ச்சி நடிகைகள் எல்லாம் தலை எடுக்க ஆரம்பித்தார்கள். டிஸ்கோ சாந்தி, அனுராதா போன்றவர்கள் எல்லாம் சில்கின் மார்க்கெட் சரியத் தொடங்கிய பிறகு தான் கவர்ச்சி நடிகைகளாக பார்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு அடுத்த வரிசையில் இருந்தவர் தான் தற்போதைய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் விசித்ரா.
Also Read:வேலை செஞ்சா தான் சோறு.. பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை பெண்டு நிமித்த வரும் டாஸ்க்
தன்னுடைய பதினாறாவது வயதில் விசித்ரா போர் கொடி என்னும் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. அதைத் தொடர்ந்து சின்னத்தாயி என்னும் படத்தில் நடித்திருந்தாலும் மக்களிடையே அதிக கவனத்தை அவர் பெறவில்லை. 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தலைவாசல் படம் தான் நடிகை விசித்ராவுக்கு ரசிகர்களிடையே அடையாளத்தை வாங்கி கொடுத்தது.
மடிப்பு அம்சா என்று கொண்டாடப்பட்ட விசித்ரா
தலைவாசல் படத்தில் விசித்திரா மடிப்பு அம்சா என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். அதிலிருந்து பல வருடங்களுக்கு அவருடைய செல்லப் பெயர் மடிப்பு அம்சா என்று இருந்தது. அப்போதைய சினிமா ரசிகர்கள் அவரை விசித்ரா என்று சொன்னதை விட, மடிப்பு அம்சா என்று அடையாளப்படுத்தியது தான் அதிகம். அந்த அளவுக்கு விசித்ராவுக்கு அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது.
கமலஹாசனின் தேவர் மகன் மற்றும் ரஜினிகாந்தின் முத்து போன்ற படங்களில் விசித்ரா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கவர்ச்சியின் நடிகையாக மட்டுமே இருந்து விடாமல் காமெடியில் கவர்ச்சி காட்டுவது என்ற வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். நிறைய கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி நடிப்பதற்கு விசித்ராவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
விசித்ராவுக்கு அப்போது நிறைய அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் நடந்திருக்கிறது. அதை எதையும் கண்டு கொள்ளாமல் தன்னால் முடிந்தவரை போராடி சினிமாவில் ஜெயித்திருக்கிறார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் சொன்ன சம்பவத்தில் தனக்கு நீதி கிடைக்காத காரணத்தினால் மட்டுமே சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார் மடிப்பு அம்சா என்று கொண்டாடப்பட்ட விசித்ரா.
Also Read:நியாயமா ரெட் கார்டு இவங்களுக்கு தான் கொடுக்கணும்.. ஆண்டவர் சொல்லியும் கேட்காத அரைவேக்காடுகள்