வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திட்டம் போட்டு இதெல்லாம் செய்றீங்களா.. ஆண்டவரின் அதிரடியால் வாயடைத்துப் போன விச்சு, அச்சு

Biggnoss7: நேற்றைய பிக்பாஸ் எபிசோட் ரணகளமாக இருக்கும் என்று பார்த்தால் வழக்கம் போல ப்ரோமோ ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றும் ஆக இருந்தது. அதன் வரிசையில் இன்றைய ப்ரோமோக்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியில் ஆண்டவர் என்ன வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா, அர்ச்சனா இருவரும் ஜெயிலுக்கு போக முடியாது என போராட்டம் செய்து விதியை மீறினார்கள். இதை நிச்சயம் கமல் கண்டிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேதான் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவிலும் நடந்துள்ளது.

Also read: இது என்ன பிக்பாஸ் ரெஸ்டாரண்டா? கெட் அவுட்.. அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

அதில் சம்பந்தப்பட்ட இருவரிடமும் இது குறித்து கமல் கேட்கிறார். அதற்கு விசித்ரா எங்களை போரிங் போட்டியாளர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சொன்னார். உடனே கமல் அப்படின்னா இந்த வீட்ல இருக்கிறவங்கல்ல யாரு அதுக்கு தகுதியானவர்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு விசித்ரா, அர்ச்சனா இருவரும் சொல்லி வைத்தார் போல் கானா பாலா, பிராவோ என கூறினார்கள். உடனே அவர்களை மடக்கும் விதமாக ஆண்டவர் நீங்கள் திட்டம் போட்டு ஒரே மாதிரி சொல்றீங்களா என கேட்டார். அதைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Also read: பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லும் நிலை வந்தது, பிரதீப் என்னை மன்னிச்சிடுங்க.. ஐஷுவின் உருக்கமான கடிதம்

இருப்பினும் விசித்ரா விளக்கம் கொடுக்க முன்வந்த போது கமல் நீங்கள் செய்த மாதிரி தான் அவங்களுக்கும் ஒரே மாதிரி ஒப்பீனியன் இருக்கலாம் என அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இதுவே மாயா, பூர்ணிமா என்றால் இந்த அளவுக்கு விசாரணை நடந்திருக்காது என கமலை கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News