சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

50 வயதிலும் இளசுகளை திணறவிடும் விச்சு.. அனல் பறக்கும் பிக்பாஸ் டிக்கெட் டு ஃபினாலே

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் விஜய் வர்மா, அர்ச்சனா கலந்து கொள்ள முடியாத நிலையில் மற்ற போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அனைவரும் கடுமையாக போராடினாலும் விசித்ராவின் முயற்சி வியப்பாகத்தான் இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் 50 வயதை கடந்த போட்டியாளர்கள் யாரும் இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடித்தது கிடையாது.

ஆனால் மனவலிமையோடு இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விசித்ரா நிச்சயம் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்றார் போல் அவரும் நேற்றைய டாஸ்க்கில் கடும் பங்களிப்பை கொடுத்தார்.

Also read: மாயாவை எலிமினேஷன் பண்ணவே முடியாது.. பிக் பாசில் நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி

அதில் தினேஷ், ரவீனா இருவரும் தோல்வியை தழுவிய நிலையில் விசித்ரா 3 ரவுண்ட் தாக்கு பிடித்தார். அதன் பிறகு தான் அவர் அவுட் ஆனார். இதன் மூலம் திறமைக்கு வயது கிடையாது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

மேலும் நேற்றைய டாஸ்க்கில் விஷ்ணு 3 மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து இன்று நடைபெறும் டாஸ்க்கும் விறுவிறுப்பாக இருக்கிறது. இப்படியாக அனல் பறக்கும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் யார் வெற்றி பெற்று நேரடியாக இறுதி மேடைக்கு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: விஜய் டிவியின் கண்ட்ரோலில் எதுவுமே இல்ல.. பிக்பாஸ் மாயா விஷயத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

Trending News