செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

குட்டு வெளிப்பட்டதும் ப்ளேட்டை மாற்றிய மிக்சர் பார்ட்டி.. ஒத்து ஊதும் விசித்ரா, அலட்டிக்காத பிரதீப்

Biggboss 7: நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த எபிசோட் தற்போது சில விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதில் இரட்டை வேஷம் போடும் மிக்சர் போட்டியாளர் தன்னுடைய குட்டு வெளிப்பட்டதும் அப்படியே தோசையை திருப்பி போட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று ஒரு சீனை கிரியேட் செய்துவிட்டார்.

அந்த வகையில் பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை பற்றிய தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறினார். அதில் ஐஷுவை பற்றி பேசிய அவர், ஒருநாள் தன்னை சார் என்று அழைப்பது, பிறகு கட்டிப்பிடிப்பது, கிஸ் கொடுப்பது என மாற்றி மாற்றி நடந்து கொள்வது குழப்பமாக இருக்கிறது என கூறினார்.

உடனே பத்ரகாளியாக மாறிய ஐஷு என்னுடைய கேரக்டரை பற்றி நீங்கள் தவறாக பேசுகிறீர்கள். இது சரி கிடையாது இனிமேல் இப்படி பேசாதீர்கள் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் நான் அப்படி பேசியது எல்லாம் ஒரு விளையாட்டுக்காக தான். அதை வைத்து என்னுடைய கேரக்டரை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும் என்றும் கேட்டார்.

உடனே பிரதீப் நீ நடந்துகிட்டது எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. அதனால்தான் அப்படி பேசினேன் மற்றபடி கேரக்டரை பற்றி நான் குறை சொல்லவில்லை என்று தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தார். இதற்கு சம்பந்தமே இல்லாமல் விசித்ரா நீ மட்டும் கண்ணடிச்சுக்கிட்டே இருக்க, நாங்க ஏதாவது சொன்னோமா, நீ ஒரு கிறுக்குன்னு நினைச்சுகிட்டு போகல அப்படித்தான் இதுவும் என்று வக்காலத்து வாங்கினார்.

அதற்கு பிரதீப் சரி இனிமே கண்ணடிக்கல என்று பேச்சை முடித்துக் கொண்டார். தற்போது இந்த விஷயம் தான் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது பிரதீப் எப்போதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறார். ஆனால் ஐஷு இரட்டை வேஷம் போட்டு நடிக்கிறார். ஆரம்பத்தில் கட்டிப்பிடிப்பது, உங்களை மாதிரி ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பேசியதற்கு என்ன அர்த்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதன் மூலம் பிரதீப் அவருடைய உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்து விட்டார் எனவும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து மிச்சர் பார்ட்டி போல் இருக்கும் ஐஷுவுக்கு விசித்ரா தேவையில்லாமல் ஒத்து ஊதி வருகிறார். ஆனால் தலைவன் பிரதீப் இதற்கெல்லாம் அலட்டிக்க மாட்டார் என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Trending News