ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குழந்தைகளின் பெயரை அறிவித்த விக்கி-நயன்.. எல்லாத்திலும் வித்தியாசம் காட்டும் ஜோடி

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்களான நயன்தாரா- விக்கி ஜோடி காதலிக்க தொடங்கிய முதல் இன்று வரை எது பண்ணாலும் வித்தியாசமாக பண்ணுவார்கள். அதை போல் பிரச்சனையும் கூடயே இன்று வரை இருந்து வருகிறது. அப்படி என்னதான் இருவரும் செய்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.

குழந்தை பிறப்பு, வாடகைத்தாய் என பல பிரச்சனைகள் புதுவிதமான விஷயங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். இப்போது அந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பல மாதம் கழித்து பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரிலும் காதல் ஜோடி ரொம்பவே வித்தியாசம் காட்டி இருக்கிறது.

Also Read: என் கேரியரை வளர விடாமல் தடுத்த நயன்தாரா.. ரஜினியுடன் நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை

கடந்த மாதம் அக்டோபர் 9ம் தேதி பிறந்த நயன்தாராவின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என்ற பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளார்கள். வித்தியாசமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் வித்தியாசமாக வைத்துள்ளனர்.

ரசிகர்கள் இதனை தற்போது எப்படி இதை கூப்பிடுவது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ பெயரா? இல்லை இந்து பெயரா? இது எப்படி அழைப்பது! வித்தியாசம் என்ற பெயரில் ரொம்ப ரொம்ப வித்தியாசமாக வைத்திருக்கின்றனர், தற்போது இந்த பெயர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read: நயன், அனுஷ்கா எல்லாம் காட்டுனா காட்டட்டும்.. அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் மிரட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

தங்கள் குழந்தைகளை யாரும் பார்க்கவும் கூடாது என்று யாரிடமும் காட்டவில்லை. தற்போது யாரும் கூப்பிடவும் கூடாது என்று இந்த பெயர்களை வைத்துள்ளனர் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இந்த குழந்தைகளை உயிர், உலகம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஏதாவது ஒரு பேட்டியில் தங்களது குழந்தைகளுக்கு எதற்காக இப்படிப்பட்ட பெயர்களை வைத்துள்ளனர் என்பதற்கான பெயர் காரணத்தை விவரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மார்க்கெட் இல்லாததால் லோ பட்ஜெட் ஹீரோவுடன் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பாராத கூட்டணி

Trending News