ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சியா.? மொத்தக் கதையும் இதுதான்

Ajith : மகிழ்திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் சில வருடங்களாக உருவாகி வருகிறது விடாமுயற்சி படம். இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் வருடக்கணக்காக காத்திருந்த நிலையில் நேற்று அஜித் தரிசனம் கொடுத்திருந்தார்.

அதாவது விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி இதில் அஜித், அர்ஜுன், ரெஜினா கசெண்ட்ரா மற்றும் திரிஷா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் டீசர் வெளியானதில் இருந்து விடாமுயற்சி படம் ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது கடந்த 1977 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக தான் விடாமுயற்சி படத்தை எடுத்திருக்கின்றனர். அதாவது அஜர்பைஜானில் தனது மனைவியுடன் ஹீரோ சுற்றுலா சென்று இருக்கிறார்.

ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள விடாமுயற்சி

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கார் விபத்து ஏற்படுகிறது. மேலும் அங்கு வரும் ஒரு டிரெக்கில் தனது மனைவியை ஏற்றிவிட்டு, டவுனில் காத்திருக்குமாறு சொல்லி அனுப்பி விடுகிறார். அதன் பிறகு ஹீரோ தனது காரை சரி செய்து மனைவியே இருக்கச் சொல்லி இருக்கும் இடத்திற்கு வந்த பார்க்கும்போது அவர் அங்கு இல்லை.

கடைசியில் தனது மனைவியை எப்படி ஹீரோ கண்டுபிடித்தார் என்பது தான் பிரேக் டவுன் படத்தின் கதை. இப்போது அதேபோல் அஜித் திரிஷாவுடன் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வது போல தான் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரேக் டவுன் படத்தின் கதையை தான் சில மாற்றங்கள் செய்து மகிழ்திருமேனி எடுத்திருக்கிறார்.

விடாமுயற்சிக்காக காத்திருந்த நிலையில் ஹாலிவுட் படத்தின் ரீமைக்கை எடுத்திருக்கிறார் மகிழ்திருமேனி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் படம் வெளியான பிறகு தான் உண்மையான கதை என்னவென்று தெரியவரும்‌. ‌

Trending News