வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விடாமுயற்சி படத்திற்கு மீண்டும் வந்த சிக்கல்.. தாடியால் அஜித்துக்கு ஏற்பட்ட சிக்கல்

Ajith : அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படம் ஒன்றாக தான் வெளியானது.

அதன் பிறகு விஜய்க்கு லியோ மற்றும் கோட் படங்கள் வெளியாகிவிட்டது. ஆனால் அஜித்தின் படம் இப்போது வரை வெளியாகாமல் காலதாமதம் ஆகி வருவதால் விடாமுயற்சி படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பம் முதலே விடாமுயற்சி படத்திற்கு பல சிக்கல் வந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக இப்போது தான் படப்பிடிப்பை தீவிரமாக நடத்தி வந்தனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் எப்படியும் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்துடன் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் வேண்டும் ஏற்பட்ட சிக்கல்

இந்த படத்திற்காக சில காட்சிகளில் தாடி வைத்து அஜித் நடிக்க வேண்டியது இருந்ததாம். அதற்காக இப்போது தாடியுடன் அஜித் இருக்கிறார். அதுவும் வெளிநாடுகளில் இன்னும் சில காட்சிகள் குட் பேட் அக்லி படத்திற்கான படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருக்கிறது.

இதில் என்ன சிக்கல் என்றால் இப்போது விடாமுயற்சி சூட்டிங் நடக்க உள்ளதாம். அதில் அஜித் தாடி இல்லாமல் நடிக்க வேண்டுமாம். விடாமுயற்சி படத்திற்காக இப்போது ஷேவிங் செய்தால் மீண்டும் தாடி வளர சிறிது காலம் ஆகும். ஆகையால் விடாமுயற்சி படத்தை ஒதுக்கி வைத்து விட்டு இப்போது குட் பேட் அக்லி சூட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார்.

அந்தப் படப்பிடிப்பை முடித்த பிறகு தான் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்த நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆனாரோ ஏதோ ஒரு பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போய் வருகிறது.

Trending News