செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஒத்த தலைய எடுக்க பத்து தலை தேவைப்படுது.. அஜித்தை கோயில் கட்டி கும்பிடணும்

வரும் பொங்கலுக்கு அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய விடாமுயற்சி பல காரணங்களால் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.

விடாமுயற்சி வரவில்லை என அறிக்கை வெளியிட்ட உடனே தற்போது வரை கிட்டத்தட்ட 11 படங்கள் திரைக்கு வர உள்ளது. தில்ராஜுக்கு சாதகமாக Lyca செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொங்கலுக்கு வெளிவர உள்ள படங்களின் மொத்த லிஸ்ட் இதோ கேம் சேஞ்சர், வணங்கான், படைத்தலைவன், #Freedom, #2KLoveStory, காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், #TenHours, தருணம், நேசிப்பாயா இத்துடன் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட விஷாலின் படம் மத கஜ ராஜாவும் வெளி வருகிறது.

இந்த மாதிரி கொடுமைகளை எங்க போய் சொல்வது என்று தெரியவில்லை என புலம்பி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஒத்த தலைய எடுக்க பத்து தலை தேவைப்படுது போன்று அஜித்தின் விடாமுயற்சி வெளிவரவில்லை என்றவுடன் 11 படங்களின் தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளாராம் அஜித்.

இவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என ஒரு புறம் கூறி வந்தாலும், விஸ்வாசமான ரசிகர்கள் அஜித்தை திரையில் பார்க்க முடியவில்லை என்று புலம்பி தான் வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Trending News