ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய் தயாரிப்பாளரால் முடங்கிப் போன விடாமுயற்சி.. துரோகத்தை துடைத்துப் போட்ட அஜித்

வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தில்ராஜ் இவர் தான் கேம் சேஞ்சர் படத்தையும் தயாரித்து வெளியிடுகிறார்,பிரமோஷன் வேலைகள் அதிரடியாக நடந்து கொண்டு வருகிறது.

கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடலுக்கு மட்டும் 90 கோடி செலவு செய்துள்ளனர்.

தில்ராஜ் மற்றும் லைக்கா இடையே காம்ப்ரமைஸ் பேசப்பட்டு விடாமுயற்சியின் ரிலீஸ் தேதி தள்ளி போட்டுள்ளனர். இது அஜித் காதுக்கு வராமலேயே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் விடாமுயற்சியுடன் கேம் சேஞ்சர் வந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.

எப்படியும் பிரமோஷனுக்கு வர மாட்டார் அஜித் என்பதை மனதில் வைத்துக் கொண்டு லைக்கா சில முக்கியமான முடிவுகளை அஜித்திடம் கேட்பதே இல்லையாம்

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் கேம் சேஞ்சிருக்கு வழி விட்டு விடாமுயற்சி வெளியேறி விட்டதாம். பொருளாதார ரீதியாக அஜித் படம் எப்ப வந்தாலும் வசூலை அள்ளிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனாலும் கோலிவுட் வட்டாரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் துரோகமாக தான் பார்க்கப்படுகிறது ஏனென்றால் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து தான் மிச்சம்.

இன்னும் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும், BreakDown படத்தின் ரீமேக் ரைட்ஸ் 30 கோடி கொடுப்பதற்கு பதிலாக ஷேர் கொடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளனர்.

இப்படி பல பிரச்சனைகளை தாண்டி பிப்ரவரி மாதத்தில் விடாமுயற்சி வெளிவருவது உறுதி. ஏப்ரல் 10ம் தேதி Good Bad Ugly படமும் வெளிவரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending News