பொங்கலுக்கு வெளிவர இருந்த விடாமுயற்சி வராது என லைக்கா திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கேம் சேஞ்சர் பொங்கலுக்கு தமிழ்நாட்டில் வெளிவர வாய்ப்பு இல்லையாம்.
அதாவது ஷங்கர் இந்தியன்-3 முடிந்த பின்னே கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட முடியும் என கோலிவுட் தயாரிப்பு சங்கம் தடை விதித்து உள்ளதாம்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் கேம் சேஞ்சர் வெளியே சென்றால் உறுதியாக விடாமுயற்சி உள்ளே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்த ஷங்கர் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இந்தியன்-3 திரைப்படத்திற்காக எடுக்க வேண்டிய உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அது காலதாமதம் ஆகும் என்பதால் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையாம்.
லைக்கா மற்றும் தில்ராஜ் கிடையே பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதால் யார் இதில் ஜெயிக்கப் போகிறார்கள், எந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை விடாமுயற்சி வெளிவந்தால் பொங்கல் அன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி வெளிவர அதிக வாய்ப்பு உள்ளதாம். இதற்கான பணிகளை இரவு பகலாக முடிக்க டீம் ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறது.
விடாமுயற்சி பொங்கலாக தமிழ்நாட்டில் அஜித் ரசிகர்கள் கொண்டாட காத்து இருக்கின்றனர். இது எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.