செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விடாமுயற்சி கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ்.. ரசிகர்களுக்காக அஜித் எடுக்கும் முயற்சி

விடாமுயற்சி படம் தள்ளிப்போனதில் பொங்கலுக்கு தொடர்ச்சியாக 10 படங்கள் வருகிறது. பல தயாரிப்பாளர்கள் குஷியாக இருந்தாலும் அஜித் ரசிகர்கள் சோகமாக இருக்கிறார்கள்.

ஆனால் கண்டிப்பாக விடாமுயற்சி படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வரும் என்றுதான் படக்குழுவினர் சொல்கிறார்கள். படத்தின் டைட்டில் போல் இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர மொத்த டீமும் இரவு பகல் பாக்காமல் வேலை செய்து வருகிறார்கள்.

அதாவது ஒரு சில படங்கள் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும். அதைத் தொடர்ந்து சில படங்கள் 14ம் தேதி திரைக்கு வரும்.

பத்தாம் தேதி திரைக்கு வரும் படங்களை பார்த்து அதன் விமர்சனங்களை பார்த்து 14ஆம் தேதி விடாமுயற்சி படத்தை வெளியிட பட குழு காத்துக் கொண்டிருக்கிறது.

ரசிகர்களுக்காக அஜித் நேரடியாக தலையிட்டு படத்தின் பிரச்சினைகளை கேட்டு வருகிறாராம். இதற்காக தன்னால் முடிந்த முயற்சியை லைகாவுடன் சேர்ந்து ரிலீஸ் பண்ணுவதில் ஈடுபட்டுள்ளார்.

அப்படி வெளிவரும் பட்சத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி தான் தல பொங்கலாக இருக்கும்.

Trending News