புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விண்டேஜ் அஜித்தின் விடாமுயற்சி வைரல் போஸ்டர்.. திரிஷாவுடன் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா.?

Ajith : துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் படங்கள் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்ற தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் அஜித், திரிஷா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் இடையே ஒரு முக்கோண பிரச்சனை போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படம் எதிர்பார்த்தபடி இப்போதைக்கு ரிலீசாகாது என கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது.

அஜித், திரிஷாவின் கலக்கல் போஸ்டர்

vidaamuyarchi
vidaamuyarchi

இந்தச் சமயத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா 5.05 pm என்று பதிவிட்டிருந்தார். இதனால் விடாமுயற்சி பற்றிய அப்டேட் வரும் என அஜித் ரசிகர்கள் செம குஷியில் இருந்தனர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அதில் அஜித் இளமையான தோற்றத்தில் திரிஷாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏற்கனவே கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் அஜித் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருக்கும்.

அந்த வகையில் எவர்கிரீன் ஜோடி மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் போஸ்டரில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் விடாமுயற்சி திருவினையாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விடாமுயற்சி அப்டேட்

Trending News