சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பண நெருக்கடியால் திண்டாடி வரும் விடாமுயற்சி.. இதுல அஜித், மகிழ் திருமேனி மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்

Ajith in Vidamuyarchi: இந்தா வருது அந்தா வருதுன்னு பல மாதங்களாக இழுத்தடித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் போன பிறகுதான் விடாமுயற்சி படத்துக்கு பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தார்கள். அத்துடன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ரிலீஸ் ஆகி விடும் என்பதற்கு ஏற்ப இந்த புத்தாண்டை மனதில் வைத்து இதில் ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று 70 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று அஜித் அதற்கு ஏற்ற மாதிரி கால் சீட் கொடுத்து இருந்தார்.

அதே மாதிரி படப்பிடிப்பு ஆரம்பித்ததும் ஆஜர்பைஜானில் மும்மரமாக அனைத்து வேலைகளும் நடைபெற்றது. போற ஸ்பீட பார்த்தா எப்படியும் கூடிய சீக்கிரத்துல முடிச்சிடுவாங்க என்று ரசிகர்கள் பெரிய நம்பிக்கை வைத்து காத்திருந்தார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு பிரச்சனையாக எழுந்து வருகிறது. முதலில் அஜித்துக்கு ரொம்பவே பிடித்தமான கேமரா மேன் நீரவ் ஷா இதில் கமிட் ஆகி பிறகு சில காரணங்களால் அவர் விலகினார்.

அதன்பிறகு இவருக்கு பதிலாக வேறொருவர் வந்த நிலையில் அஜித்துக்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று அஜித் இயக்குனருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் தற்போது ரொம்பவே இழுத்தடிப்பதால் அஜித், மகிழ் திருமேனி மீது கோபப்படுகிறார்.

Also read: நான் வெஜ்ஜை நிறுத்திட்டு சியர்ஸ் போடும் அஜித்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மகிழ் திருமேனி

ஆனால் இதற்கு எந்த விதத்திலும் மகிழ் திருமேனி பொறுப்பாகாது. காரணம் ஆஜர்பைஜானில் இயற்கை சம்பந்தமான பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது மணல் புயலும், கடுமையான குளிரும் அதிகரித்ததால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் அடிக்கடி கேன்சல் பண்ணும் நிலைமை ஆகிவிட்டது.

இப்படி ஒரு பக்கம் இந்த பிரச்சினைகள் இருந்தாலும் இதைவிட உண்மையான காரணம் என்னவென்றால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்துவதற்கு லைக்காவிடம் போதுமான நிதி இல்லாததால் சூட்டிங் காலதாமதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் உண்மையாகவே விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போவதற்கான ரகசியம்.

ஆனால் இது அஜித்துக்கு தெரிந்தும் தெரியாமலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இருந்தாலும் இதற்கு காரணம் இயக்குனர் மகிழ் திருமேனி தான் என்று அவர் மீது கோபத்தைக் காட்டுவது எந்த விதத்திலும் பிரயோஜனமே இல்லை. விடாமுயற்சி என்று எந்த நேரத்தில் டைட்டில் வச்சாங்களோ ஒவ்வொரு நாளும் போராடும் நிலைமைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விட்டார்கள். கூடிய விரைவில் விடாமுயற்சி படத்துக்கு விடிவு காலம் கிடைத்தால் ரசிகர்களுக்கு மிக்க சந்தோசம்.

Also read: அஜித் எதிரியாக இருந்தாலும் அவரையே பாலோ பண்ணும் வடிவேலு.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது

Trending News