சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சத்தமில்லாமல் 25வது படத்தை தொட்ட விதார்த்.. அளவான சம்பளம், வித்தியாசமான கதைகள்.. வேறென்ன வேணும்!

துணை நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறியவர் விதார்த். அதிலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படம் இவருக்கு வேறு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

அதன்பிறகு பெரியளவு வசூல் செய்யும் படங்களில் வித்தார்த் நடிக்கவில்லை. ஆனால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மினிமம் பட்ஜெட்டில் கணிசமான லாபம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் குறைந்தது வருடத்திற்கு விதார்த் நடிப்பில் 3 படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள். தயாரிப்பாளர்கள் கையை கடிக்காத வண்ணம் படம் நடித்து மினிமம் கேரண்டி நடிகராக வருகிறார்.

இதற்காகவே விதார்த்தை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதன் காரணமாக 25வது படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்துள்ளனர். வித்தியாசமான டைட்டில், வித்யாசமான கதை என்பது விதார்த்துக்கு பழக்கம் தானே.

விதார்த்துக்கு மார்க்கெட் இல்லை என பலரும் கோலிவுட் வட்டாரங்களில் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் 20 முதல் 40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டு வருடத்திற்கு பல படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அதிலும் கடைசியாக விதார்த் நடிப்பில் வெளியான வண்டி, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற படங்கள் அனைத்துமே எதார்த்த கதைகளில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

carbon-cinemapettai
carbon-cinemapettai

Trending News