Anjaamai Trailer: இப்போது எல்லாம் சமூக அவலத்தை எடுத்துக்காட்டும் பல படங்கள் வெளியாகி வருகிறது. அதில் நம் நாட்டில் மாணவர்களுக்கான பிரச்சினையாக பார்க்கப்படும் நீட் தேர்வை மையப்படுத்தி அஞ்சாமை உருவாகியுள்ளது.
எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரகுமான், வாணி போஜன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜூன் மாதம் வெளிவர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதன் ஆரம்பத்திலேயே விதார்த் மேடையில் கூத்து நடத்தும் காட்சி தான் காட்டப்படுகிறது. அதில் தேர்தலுக்கு முன் கையெடுத்து கும்பிடுவது நீங்கள் தேர்தலுக்கு பின் குனிவது நாங்களா என்ற வசனமே பட்டையை கிளப்புகிறது.
நீட் தெருவினால் மக்களின் மனநிலை என்ன என்பதை அடுத்தடுத்த காட்சிகள் விவரிக்கிறது. இதில் பையனை படிக்க வைக்க வேண்டும் என விதார்த் கலங்குவதும் என் பையனையும் உன்ன மாதிரி தெருல ஆட விட்டுடாத என வாணி போஜன் சொல்லும் இடமும் எதார்த்தம்.
நீட் தேர்வின் அவலத்தை சொல்லும் அஞ்சாமை
இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லரில் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய மக்களின் குமுறல்கள் தான். படிச்சா போதும்னு ஒரு காலம். மார்க் வாங்கணும்னு ஒரு காலம். ஆனா இப்ப அவங்க சொல்றத தான் படிக்கணும்னு ஆகிப்போச்சு.
கல்விய கஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி உருவாக்கி வச்சிருக்காங்கன்னு நம்ம என்னைக்காவது யோசித்திருப்போமா? கடந்த பத்து ஆண்டுகளில் 390 மாணவர்கள் தான் அரசு பள்ளியில் இருந்து மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் நீட் தேர்வுக்கு பிறகு வெறும் ஏழு பேர் தான் மருத்துவர் படிப்புக்கு தேர்வாகி இருக்கின்றனர் போன்ற வசனங்கள் அனைத்துமே நடைமுறையின் குமுறல். இப்படி ட்ரெய்லர் முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டை அடியாக இருக்கிறது.
இதுவே படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் ரகுமான் வழக்கறிஞராக, பிள்ளையை பெற்றவர்களாக விதார்த், வாணி போஜன் என அனைவரின் கதாபாத்திரமும் சிறப்பான தேர்வாக உள்ளது.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லர்கள்
- மிரட்டும் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் ட்ரைலர்
- வெறி பிடித்த மிருகமாக மாறிய சூரி.. மாஸ் ட்ரைலர்
- கருணாஸ் உடன் மிரட்டும் விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை ட்ரெய்லர்