வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

Actor Vijay Sethupathy: பெயருக்கேற்றார் போல் வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் எப்போதுமே தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதனாலேயே இவருடைய படங்கள் தேசிய அளவில் விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதைத்தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பை வெற்றிமாறன் இப்போது பூர்த்தி செய்ய மாட்டார் போல. ஏனென்றால் இந்த இரண்டாம் பாகம் சம்பந்தமான சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம். ஏற்கனவே இரண்டு பாகத்திற்கும் சேர்த்து சூட்டிங் முடிந்துவிட்டது என சொல்லப்பட்டது.

Also read: விடுதலை பட தமிழரசியா இது.. அடையாளமே தெரியாத கிளாமர் உடையில் வெளியான புகைப்படம்

ஆனால் வெற்றிமாறன் சில காட்சிகள் எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு வார காலம் ஷூட்டிங் நடத்த பிளான் போட்டிருக்கிறாராம். அதன்படி தற்போது சூரியிடம் கூட தேதிகள் வாங்கி விட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதியை படக்குழுவினரால் பிடிக்க முடியவில்லை. பாலிவுட் படங்களில் பிசியாக இருக்கும் அவரால் இப்போது விடுதலை 2 அந்தரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர் தான் பாவம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கனவே எதிர்பார்த்ததற்கும் மேலாக படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு என்று சொல்லி ஒரு குண்டை போட்டி இருக்கும் வெற்றிமாறன் விஜய் சேதுபதி வந்ததும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று அடுத்த வேலையை பார்க்க நடையை கட்டி விட்டாராம்.

Also read: நிற்க நேரமில்லாமல் பறக்கும் விஜய் சேதுபதி.. விடாப்பிடியாய் நின்று கால்ஷீட்டை வாங்கிய இயக்குனர்

அதாவது இவருடைய வாடிவாசல் படத்திற்காக சூர்யா மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் கூட பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இரு தரப்பும் பிசியாக இருப்பதால் இந்த வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் வெற்றிமாறன் இப்போது வாடிவாசல் களத்தில் குதிக்க தயாராகி விட்டாராம்.

மேலும் இந்த படத்தின் பாதி சூட்டிங்கை முடித்துவிட்டு விடுதலை 2 பட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றும் அவர் மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறாராம். அதாவது விடுதலை முதல் பாக விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இரண்டாம் பாகம் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது வாடிவாசலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் வெற்றிமாறன் விரைவில் அடுத்த கட்ட அப்டேட்டை வெளியிடவும் தீவிரம் காட்டி வருகிறார்.

Also read: குடிபோதையில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர்.. மனவேதனையில் துடிக்கும் வெற்றிமாறன்

Trending News