வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி தமிழகம் எங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது, நடிகர் சிம்புவின் 10 தல திரைப்படத்துடன் ரிலீஸ் ஆகி இருந்தாலும் சிறந்த கதைகளத்தின் காரணமாக இன்று சினிமா ரசிகர்களால் இந்த படம் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நல்ல திரைக்கதை, சிறந்த நடிகர்கள் என வெற்றிமாறனின் தேர்வில் உருவாகிய இந்த திரைப்படம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கலைஞர்களும் பாராட்டும் விதமாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக மொத்த பட குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் மலை மற்றும் மலை சார்ந்த காடுகளில் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் உடனே வெற்றி விழா கொண்டாட்டம் வைப்பதோடு படத்தில் பணி புரிந்த அனைவர்களுக்கும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது. விக்ரம் பட வெற்றியின் போது கூட உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்ததோடு விலை உயர்ந்த பரிசையும் வழங்கி இருந்தார்.

அதேபோன்றுதான் தற்போது விடுதலை படத்தின் வெற்றியையும் கொண்டாடும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய விழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவில் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த பரிசை வழங்கி இருக்கிறார்.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

இந்த படத்தின் வெற்றி என்பது நான்கு வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு. எனவே தயாரிப்பாளர் எல்ரெட் குமார் எந்த பாரபட்சமும் இன்றி படத்தில் பணி புரிந்த அத்தனை பேருக்கும் ஒரு பவுன் தங்க காசு வழங்கி கௌரவித்திருக்கிறார். இது விடுதலை பட குழுவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கொடுத்தது போல் ஆகி இருக்கிறது.

இதற்கு முன்னரே படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடன் சேர்ந்து கடினமாக உழைத்த உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கு இரண்டு கிரவுண்ட் இடம் வாங்கி கொடுத்தார் என்ற தகவல் வெளியானது. இதற்கிடையில் தயாரிப்பாளரும் இந்த கடின உழைப்பை கௌரவிக்கும் வகையில் பரிசளித்து தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

Also Read:சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

 

Trending News