வெற்றி கொண்டாட்டத்தில் விடுதலை படக்குழு.. வெற்றிமாறன் செய்த காரியம்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது விடுதலை திரைப்படம். இந்த படத்திற்காக வெற்றிமாறன் மற்றும் அவருடைய படக்குழு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார்கள். இந்த படம் பெரும்பாலும் மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. இதற்காக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

பட்ட கஷ்டத்திற்கு கை மேல் பலனாக தற்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது இந்த குழுவுக்கு. வெற்றிமாறனை பொறுத்த வரைக்கும் தொட்டது எல்லாமே பொன் தான். அவருடைய திரைக்கதை மீது எப்போதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை விடுதலை திரைப்படத்திலும் காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

Also Read:தியேட்டரிலேயே புருஷனுக்கு பளார் விட்ட நடிகை.. மொத்த அருவருப்பையும் தோளில் இறக்கிய வெற்றிமாறன்

ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மட்டும் பொறுப்பல்ல, மொத்த பட குழுவும் தான். சமீப காலமாகவே ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படத்தின் இயக்குனர் அல்லது ஹீரோ பட குழுவுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுக்கிறனர். அதேபோல் தான் இப்போது விடுதலை பட குழுவும் வெற்றியை கொண்டாடி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறனை பொறுத்த வரைக்கும் எப்போதுமே ஒரு விஷயத்தை வித்தியாசமாக செய்யக்கூடியவர். அதிலும் மனிதர்களை மதிக்கும் பண்பு அவருக்கு ரொம்பவே அதிகம். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் வெற்றி. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனர்களும் இதுபோல் செய்ததில்லை.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

விடுதலை படத்தில் தனக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்த அத்தனை பேருக்கும் வெற்றிமாறன் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். உத்திரமேரூர் பக்கத்தில் ஆளுக்கு இரண்டு கிரவுண்ட் இடம் வருவது போல் 25 உதவி இயக்குனர்களுக்கு இடம் வாங்கி கொடுத்திருக்கிறாராம். இதை தற்போது கோலிவுட் சினிமா வட்டாரம் பாராட்டி வருகிறது.

உதவி இயக்குனர்களாக வருபவர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு சம்பளம் கூட கொடுக்காமல் விட்டு விடும் எந்த காலத்தில் வெற்றிமாறன் இப்படி செய்திருப்பது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தங்கம், பைக் என நிறைய நடிகர்கள் தற்போது வெற்றி கொண்டாட்டத்தினை பரிசாக வழங்கி வருகின்றனர். ஆனால் வெற்றிமாறன் அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான ஒன்றை செய்து உதவி இருக்கிறார்.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை