வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கையில் விலங்குடன் விஜய்சேதுபதி, போலீசாக சூரி.. வைரலாகும் விடுதலை பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

வெற்றிமாறன் பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் எடுக்கும் அனைத்து படங்களுமே வெற்றி பெற்று வருகிறது. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் வெற்றி தான். ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற வெற்றி மாறன் சமீபத்தில் அசுரன் படத்திற்காக இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றுள்ளார்.

தற்போது காமெடி நடிகர் சூரியை மையமாக வைத்து விடுதலை என்ற படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளதாம்.

தற்போது வரை படம் குறித்த எந்தவித அப்டேட்டுகளும் வெளிவராத நிலையில் விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதுதவிர சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் விடுதலை படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “விடுதலை படம் நாங்கள் நினைத்ததை விட மிகவும் சவாலாக உள்ளது. ஏனென்றால் காட்டில் படம் எடுப்பதால் லைட்டிங் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் முடிந்த வரை பகலிலேயே ஷூட்டிங் எடுத்து வருகிறோம்.

soori-viduthalai
soori-viduthalai

முதலில் விஜய் சேதுபதி தன் கேரக்டருக்காக 8 நாள் மட்டும் ஷூட்டுக்கு வந்தால் போதும் என நினைத்தேன். ஆனால் 25 நாட்கள் தேவைப்படுமாறு ஆகிவிட்டது. தற்போது இன்னும் 20 நாட்கள் தேவைப்படுகிறது. அதேபோல் நடிகர் சூரியும் விடுதலை படத்திறாகாக மிகவும் சின்சியரா நிறைய படங்களில் நடிக்காமல் காத்து கொண்டிருக்கிறார்” என கூறியுள்ளார்.

vijaysethupathi-viduthalai
vijaysethupathi-viduthalai

எனவே முடிந்த வரை படத்தை விரைவாக முடித்து விட்டு சூர்யாவின் வாடிவாசல் மற்றும் விஜய் படங்களில் வெற்றி மாறன் கவனம் செலுத்த வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றது.

Trending News