செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

காதல் வலையில் சிக்கிய வித்யா, காரியத்தை சாதித்த முத்து.. ரோகிணியை ஆட்டி படைக்கும் மீனா, பீதியில் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், என்னுடைய போனை திருடியது ரோகிணி தான். சத்யா வீடியோ வெளிவர காரணமும் ரோகிணியாக தான் இருப்பார் என்று முத்துவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் இதை எப்படி ஆதாரத்துடன் கண்டுபிடிப்பது என்று முத்து, மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது செருப்பு தைக்கும் தாத்தாவுக்கு வித்யா மற்றும் ரோகினியின் புகைப்படத்தை அனுப்பி யார் போனை விட்டுட்டு போனாங்க என்பதை கேட்டுக் கொள்ளலாம் என முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் வித்யாவின் போட்டோ மீனாவிடம் இல்லை என்பதால் முத்து, நாளைக்கு வித்தியாவின் வீட்டுக்கு போய் எப்படியாவது சந்தேகம் வராதபடி வித்யாவை போனில் போட்டோ எடுத்துட்டு வா என்று முத்து ஐடியா கொடுக்கிறார்.

அதற்கு மீனாவும் ஓகே என்று சொல்லிவிட்டார். மறுநாள் வித்யா ஆபிஸ்க்கு கிளம்பிய நிலையில் வித்யாவை காதலிக்கும் அந்த நபர் வந்து விடுகிறார். பிறகு இருவரும் ஜொள்ளுவிட்டு பேசுகிறார்கள். அந்த வகையில் வித்தியாவுக்கும் அந்த நபர் பிடித்து விட்டது. பிறகு அவர் போனதும் தனியாக வித்தியா வீட்டிற்குள் இருந்து சிரித்து பேசி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அந்த நேரத்தில் மீனா வந்ததும் மீனாவிடம் காதல் மற்றும் ரொமான்ஸ் பற்றி கேள்விகளை கேட்டு வித்தியா வெட்கப்பட்டுக் கொள்கிறார்.

உடனே மீனா இதுதான் சான்ஸ் என்று நீங்க வெட்கப்படுவது ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லி மீனா அவருடைய ஃபோனில் போட்டோ எடுப்பதாக சொல்லி அந்த போட்டோவை வித்யாவிடம் காட்டுகிறார். அந்த போட்டோவை பார்த்ததும் வித்யாவிற்கும் நாம் காதலிக்க ஆரம்பித்து விட்டோம் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். பிறகு மீனா எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது நான் கிளம்புகிறேன் என்று சொல்லி போய் விடுகிறார்.

அப்படி போனதும் கீழே முத்து காத்துக் கொண்டிருப்பதால் முத்துவிடம் வித்யா போட்டோவை கொடுத்து விடுகிறார். உடனே முத்து, செருப்பு தைக்கும் தாத்தாவின் பேரனுக்கு வித்யா மற்றும் ரோகிணியின் புகைப்படத்தை அனுப்பி இவர்களில் யார் போனை தவற விட்டுட்டு போனாங்க என்று தாத்தாவிடம் கேட்டு சொல்லும்படி கேட்கிறார். அவரும் நான் வேலை விஷயமாக வெளியே வந்திருக்கிறேன் வீட்டுக்கு போனதும் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

அந்த வகையில் தாத்தா நிச்சயம் வித்யாவை காட்டிக் கொடுத்து விடுவார். இதனை தொடர்ந்து ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் மனோஜ் இல்லை என்ற நினைப்பில் வீடு முழுவதும் போய் பார்க்கிறார். அப்படி பார்க்கும் பொழுது யாருமே இல்லாமல் ஒரே ஒரு உருவம் மட்டும் நிற்பது போல் ரோகிணி கண்ணுக்கு தெரிகிறது. அந்த உருவத்தை பார்க்கும் பொழுது பேய் மாதிரி தலையை விரித்து போட்டு கண்ணு முகம் எல்லாம் பேயாக ரோகிணிக்கு தெரிகிறது.

அது வேறு யாருமில்லை மீனாதான், அதாவது மீனாவுக்கு தன்னுடைய தம்பி வீடியோவை வெளியே அனுப்புனது ரோகிணி தான் என்று தெரிந்து விடுகிறது. அதனால் பேய் ஆட்டம் ஆடி நம்மளை பயமுறுத்துகிறார் என்ற நினைப்பில் ரோகிணி கனவில் பயப்பட ஆரம்பித்து விட்டார். அத்துடன் மீனா, ரோகிணி ஆட்டிப்படைக்கும் அளவிற்கு பயம் காட்டி விடுகிறார்.

இதனால் பயத்தில் ரோகினி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி படுத்து கொண்டிருந்த மனோஜை கீழே தள்ளிவிட்டு பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்கிறார். இதனை பார்த்த மனோஜ் பீதி அடைகிறார். உடனே ரோகிணி பண்ற விஷயத்தை எல்லாம் வீடியோ எடுத்து விடுகிறார். தப்பு பண்ணவங்க ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள் என்று சொல்வார்கள்.

அது ரோகினி விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது, பொய்யும் பித்தலாட்டமும் பண்ணியதிலிருந்து நிம்மதியான தூக்கம் ரோகினிக்கு இல்லாமல் அவஸ்தை பட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ரோகிணி எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலையை பார்த்து வருகிறார் என்பதை முத்து கூடிய சீக்கிரத்தில் கண்டுபிடித்து விடுவார்.

Trending News