சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அனிருத் மீது வெறுப்பை கக்கும் விக்னேஷ்.. நண்பன் என்றும் பாராமல் அடித்த பட்ட நாமம்!

Vignesh harbors a grudge against Anirudh: விஜய் சேதுபதி நடித்த, காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பின் அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணி பரவலாக பேசப்பட்டது. 

யாரு கண் பட்டதோ திடீரென மகிழ் திருமேனியுடன் கூட்டணி சேர்ந்து விக்னேஷ் சிவனே கழட்டிவிட்டார் அஜித்.

இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர், தனது மனைவி நயன்தாராவின் மூலம் தூது அனுப்ப, அதுவும் சரிவராமல் போகவே மனதை தேற்றிக்கொண்டு, “லவ் டுடே” புகழ் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்தார்.

இயற்கை விவசாயம் மற்றும் காதலை காம்பினேஷன் ஆகக் கொண்டு ஒரு புதுவிதமான கதையை ரெடி செய்தார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி செட்டி, நயன்தாரா, எஸ் ஜே சூர்யா, சீமான் என பல முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில், எல்ஐசி-லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உருவாகி வருகிறது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தலைப்பு முதலாக பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்ட விக்னேஷ் சிவனுக்கு தற்போது தனது நண்பர் இசையமைப்பாளர் அனிருத்தின் மூலம் தலைவலி தலை தூக்கி உள்ளது.

விக்னேஷ் சிவனின் படங்கள் அனைத்திற்கும் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான்.

படங்களுக்கு மட்டுமின்றி விக்னேஷ் சிவன் எழுதும் பல பாடல்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பார் என்பது ரசிகர்களாகிய அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

விக்னேஷ் சிவன் எழுதிய 28 பாடல்களில் 19 பாடல்களுக்கு இசை அமைத்தவர் அனிருத் தான். திரைத்துறையை தாண்டி இவர்களுக்கு இடையே நல்லதொரு பாண்டிங் நிலவி வருகிறது.

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்திற்காக 12 கோடி சம்பளம் பெற்ற அனிருத்

தற்போது விக்னேஷ் சிவன் குறைந்த பட்ஜெட்டில் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் சம்பளம் மட்டும் 12 கோடி ரூபாய்.

சம்பளம் விஷயத்தில் சமரசம் செய்யாத இந்த நண்பர், காசு வாங்கிக்கொண்டு ஒழுங்காக பாடல் கொடுப்பதில்லை என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் படங்களின் பாடல்களில் அனிருத் ஓவர அலப்பறை பண்றது, அனைவரும் அறிந்த விஷயம் தான். 

ஆனால் இந்த அலப்பறையை தனது நண்பரிடமே காண்பிப்பார் என்பது யாவரும் எதிர்பார்க்காத ஒன்று.

பாடலை சரியான நேரத்திற்குகொடுக்காமல் அலை கழித்து வருகிறார் அனிருத். நண்பர் என்பதால் விக்னேஷ் சிவனும் வாய் திறந்து மறுமொழி பேச முடியாது அமைதி காத்து வருகிறார்.

 

Trending News