வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வெற்றிமாறனை பின்பற்றும் விக்னேஷ் சிவன்? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல.. நெட்டிசன்கள் விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.கே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் எல்.ஐ.கே. இப்பட த்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே,சூர்யா, யோகிபாபு, கெளரி ஜி, கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷரா, முகமது ரசூல் மற்றும் எடின் ரோஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் ஷூட்டிங் தமிழகத்தில் சில பகுதிகளில் எடுக்கப்பட்டு, அதன்பின், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படம் காதல் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையமைப்பில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே எல்.ஐ.சி என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலையில் எஸ்.எஸ்.குமரன் மற்றும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பதிப்புரிமை கோரிக்கையால் இப்படத்தின் தலைப்பை படக்குழு எல்.ஐ.கே என மாற்றி வைத்துள்ளது.

l.i.k – பட பாடல் காட்சியை ரிஷூட் செய்யும் விக்னேஷ் சிவன்

இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சிங்கப்பூரில் எடுத்த நிலையில், இதன் காட்சிகளை எடுத்துப் போட்டுப் பார்த்த போது இயக்குனருக்கு திருப்தி அளிக்காத நிலையில் இதை மறுபடி ஷூட் பண்ண முடிவெடுத்துள்ளனர். ஆனால் சிங்கப்பூரில் ஷூட்டிங் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்காது என்பதால், மலேசியாவில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

விடுதலை படத்தில் தான் எடுத்த காட்சிகள் திருப்தி இல்லாததால் திரும்ப ஷூட் பண்ணி அப்படத்தை ஹிட்டாக்கிய வெற்றிமாறன் மாதிரி விக்னேஷ் சிவனும் பாடல் காட்சி திருப்தி தராதால் ரீ ஷூட் பண்ண வெளிநாடு செல்லவிருப்பது கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. ஆனால் இத்தனை கோடி செலவழிக்கும் படத்தின் முதலில் எடுக்கும் போதே திட்டமிட்டபடி எடுக்கலாம் அல்லவா? அப்படி எடுத்திருந்தால் இந்த செலவு மிச்சம் தானே. இப்படி திரும்ப ரீ ஷூட் செய்வது எல்லாம் கொஞ்சம் ஓவர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Trending News