வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Luck-ன்னா இப்படி இருக்கணும்.. ஆனால் இப்படி நன்றியை மறக்க கூடாது.. வாழ்க்கை கொடுத்த தனுஷுக்கே பாடம்

சும்மா கிடந்தவனுக்கு திடீர்னு வந்துச்சாம் யோகம்..இந்த சொலவடையை பெரியவர்கள், சாதாரண மனிதர்களுக்கு பெரிய வாழ்க்கை கிடைக்கும்போது கூறுவார்கள். அது தான் தற்போது விக்னேஷ் சிவன் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. தனுஷ் பக்கம் நிற்க ரசிகர்களுக்கு தொடர்ந்து காரணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

தனுஷுடன் நட்பு உருவான கதை குறித்து விக்னேஷ் சிவன் முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் அவரே கூறியிருந்தார். தற்போது அந்த விடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தனுஷ் இல்லனா.. படமும் இல்ல நயனும் இல்ல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கோபுரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்த தனுஷ்

அந்த பெட்டியில் விக்னேஷ் சிவன் கூறியது, “நான் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து பணியாற்றினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தனுஷ் என்னிடம் உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும், என்ன வேண்டும் கேள் என்று சொன்னார்.”

“உடனே நான் சார் என்னிடம் ஒரு கதை உள்ளது. அந்த கதையை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே, என்ன கதை என்று கூட கேட்காமல் ஓகே என்று சொன்னார். தொடர்ந்து ஹீரோ யார் என்று அவர் கேட்டபோது, நான் முன்னதாக இந்த கதையை கௌதம் கார்த்திக்கிடம் கூறி வைத்திருந்தேன். அதை அவரிடம் சொன்னேன். “

“அது பின்னர் அப்படியே மாறி மாறி விஜய் சேதுபதியிடம் வந்தது. படத்திற்குள் நயன்தாராவை அழைத்து வந்ததும் தனுஷ் சார் தான்; ஒரு நாள் ஹீரோயின் யார் என்று கேட்டார். இந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை, அதனால் பெரிய ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.”

“உடனே நயன்தாரா கிட்ட பேசுறியா என்று கேட்டார். ஆனால் எனக்கு எப்படியும் நயன்தாரா இதுக்கு ஒப்புக்கொள்ளமாட்டார். போயி போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடுவோம் என்று தான் நினைத்தேன். அவரை பார்க்கும் போது ஆட்டோவில்தான் சென்றேன். “

“முதலில் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு என்னுடைய கதையை கேட்க தயாரானார். அதுவே எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. காரணம் என்னவென்றால்,நான் முன்பு கதை சொன்ன ஆட்கள் எல்லோருமே கதையைக் கேட்கும் போது ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே தான் கதையை கேட்பார்கள். ஆனால், எனக்கு நயன் இந்த முறையில் கேட்டதே மிகவும் தன்னம்பிக்கையை கொடுத்தது.”

“படத்தில் உள்ள ஒரு சில காமெடிகளை அவர் விழுந்து விழுந்து சிரித்தார்..” என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். அப்றம் என்ன, கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிடீங்க அதானே.. என்று ரசிகர்கள் ஒருபுறம் நக்கல் செய்து வர, இன்னொரு பக்கம், ஏன் தனுஷ் வளர்த்துவிட்ட எல்லோரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Trending News