வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்.. ஏகே 62-க்கு வந்த சோதனை

வினோத்-போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

மேலும் அனிருத் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஆனால் இப்ப வரைக்கும் யாரும் தல அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என அஜித்குமார் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. இப்போது விக்னேஷ் சிவன் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டார்.

Also Read: தேசிய விருது இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித்

இதனால் ஏகே 62 படத்திற்கும் பிரச்சனையில் சிக்கி உள்ளது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் போன்ற இரண்டு படத்திற்குமே எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

இதனால் ஏகே 62 படத்தின் மூலம் எப்படியாவது வெற்றி கொடுக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவுடன் தாய்லாந்து தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஹனிமூனில் அலப்பறை பண்ணும் நயன்தாரா,விக்கி

இதற்கிடையில் ஏகே 62 படத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன். இதை அறிந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா சீக்கிரம் ஏகே 62 படத்தின் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தள்ளி இருக்கிறது.

ஒருவேளை லைக்கா நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் சொல்கின்ற கதை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என விக்னேஷ் சிவன் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார். இது அவருக்கு மட்டுமல்ல. ஏகே 62 படத்திற்கும் வந்த பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

Also Read: பின் கழுத்தில் டாட்டூ குத்திய நயன்தாராவின் ரகசியம்

Trending News