நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் ஆடை வடிவமைப்பாளர் மோனிஷா நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி விவரித்துள்ளார். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது
ரஜினிகாந்த்,ஷாருகான்,சரத்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே நயன்தாராவின் சிவப்பு வண்ண திருமணப் புடவை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பிரபல ஜேட் சிக்னேச்சர் ஆடை வடிவமைப்பாளர் நிறுவனரான மோனிகா ஷா நயன்தாராவின் திருமண புடவையை வடிவமைத்துள்ளார். வெர்மில்லியன் ரெட் நிறத்தில் லெஹங்கா போன்ற வடிவமைப்பில் நயன்தாராவின் திருமண புடவை அமைந்திருந்தது.
மேலும் அந்த புடவையில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஹோய்சல என்ற 11 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் வடிவத்தை பூத்தையல் போட்டு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.மேலும் வாழ்க்கையில் லட்சுமி கடாக்ஷம் உண்டாக வேண்டும் என்பதற்காக நயன்தாராவின் முழுக் கை வைத்த பிளவுஸில், கடவுள் லக்ஷ்மியின் உருவமும் பல்வேறு மணிகளும் பொறிக்கப்பட்டுள்ளது என மோனிகா ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் நயன்தாராவின் புடவையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த புடவைக்கு ஏற்றார்போல மரகதம் பொருந்திய வைர நகைகளை நயன்தாரா அணிந்திருப்பார். கழுத்தில் ஜாம்பியன் மரகதம் நெக்லஸ்,போல்கி செயின், சாட்லடா எனப்படும் 5 அடுக்கு வைர ஹாரம் உள்ளிட்டவாற்றை அணிந்திருக்கிறார்.
அதேபோல பழுப்பு நிற வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து விக்னேஷ் சிவனும் கலக்கலாக இருந்தார். பிரமாண்டமாக நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் அணிந்திருந்த ஆடைக்காகவே இவ்வளவு வித்தியாசமாக மெனக்கெட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவை மற்றும் நகைகள் குறித்த தகவல் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது