சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நயன்தாரா கல்யாண வீடியோ பிஸ்னஸ் மொத்தமும் காலி.. கூடவே இருந்தியே செவ்வாழ இப்படி கவுத்துட்டியே

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் கடந்த மாதம் 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவனின் கல்யாண வீடியோவை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம் பேரம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவரகளது திருமணத்தில் செல்போன் எடுத்துபோகக்கூடாது என்றும் மீறி கொண்டுப்போனால் செல்பி எடுக்க கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்திருந்தார். இதனிடையே பல பிரபலங்கள் நயன்தாரா திருமணத்தின் நிபந்தனைகளை கேட்டே வரவில்லை என பேசப்பட்டது.

கோவில் கோவிலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் சுற்றி வந்த நிலையில், திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வியாபாரத்திற்காக தனது திருமணத்தை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நடத்த திட்டமிட்டிருந்த நயன்தாரா, 25 கோடி ரூபாய் வரை திருமண வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸில் விற்று லாபம் பார்க்க நினைத்தார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் சூர்யா ஜோதிகா , ஏ.ஆர் ரஹ்மான், ஷாருகான் உள்ளிட்டோர் உள்ள புகைப்படங்கள் வெளியானது.

இதனிடையே திருமணமாகி ஒரு மாத காலமாகியும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை இன்னும் ஒளிபரப்பாமல் உள்ளதால் விக்னேஷ் சிவனே புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ட்ரெண்டிங்கில் இல்லாததால்,இதனை புரிந்து கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமண வீடியோவிற்கு 25 கோடி ரூபாய் தருவதற்கு பதிலாக அதற்கும் கம்மியாக தரலாம் என பேரம் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதன் காரணமாகவே விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Trending News