வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சும்மா இருந்த வாய்க்கு கிடைச்ச அவல்பொரி.. விவாகரத்து சர்ச்சைக்கு பதறிப் போய் பதிலடி கொடுத்த விக்கி-நயன்

Nayanthara-Vignesh Sivan: ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலே மீடியாக்கள் அதை ஊதி பெரிதாக்கி விடும். அதில் சும்மா இருந்த வாய்க்கு அவல் பொரி கிடைத்தால் என்ன ஆகும். அப்படித்தான் தற்போது விக்கி, நயன்தாரா விஷயத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். அடிக்கடி நயன்தாரா தன் பிள்ளைகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதுண்டு.

அதற்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டமே இருக்கிறது. இப்படி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற ஒரு செய்தி காட்டு தீ போல் பரவியது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் நயனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் அன்பாலோ செய்யப்பட்டிருந்தார்.

Also read: நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

இதைப் பார்த்த நெட்டிசன்கள் உடனே விவாகரத்து என்ற செய்தியை பரப்பி விட்டனர். ஆனால் உண்மையில் டெக்னிக்கல் பிரச்சனையின் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதை அடுத்து உடனே அது சரி செய்யப்படும் விட்டது.

nayan-wikky
nayan-wikky

ஆனால் அதற்கு முன்பாகவே இந்த விவாகரத்து செய்தி பூதாகரமாக வெடித்து இணையத்தையே அதிர வைத்து விட்டது. அதனாலேயே விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தன் மனைவியுடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறார். அதை பார்த்து சந்தோஷப்பட்ட நயன்தாரா விக்கியை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் என் பேபியின் முகத்தில் இருக்கும் அந்த லவ்வை தான் நான் விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த விவாகரத்து சர்ச்சையை அவர் உடைத்துள்ளார்.

Also read: சக நடிகைகளை அசிங்கப்படுத்திய 5 நடிகர்கள்.. நயன்தாராவை பேசி சூனியம் வைத்து கொண்ட ராதாரவி

Trending News